எண்ணைக்குளியல்

எண்ணைக்குளியல்

நமது மூதாதையர் இதயத்தை அதாவது மனதை நலமாக வைத்திருப்பதை போல்  உடலையும்  தூய்மையாக வைத்திருப்பதை மிக முக்கியமாக  கடமையாக வைத்திருந்தனர்.
காலைக் கடமைகளில் எண்ணெய் பூசிக்குளித்தல் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.அடி முதல் முடி வரை நன்றாக எண்ணெய் தேய்த்து மூழ்கி குளிப்பதை நம் முன்னோர்கள் ஒரு நோய் தடுப்பு முறையாக  கருதியிருந்தனர்.

ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில்  நன்மைகள் ஒன்றும் இல்லை என்று ஆங்கில   மருத்துவர்களும் ,வேறு  பலர் ஒப்புக் கொள்வது இல்லை.ஆனால்  உடல்  புத்துணர்ச்சிக்காகவே எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர்.எண்ணைக்குளியல் மேன்மையான இரண்டு செயல்கள் பெரும் பயனளிக்கின்றன. முதலாவதாக எண்ணெயில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயணுக்கள் எண்ணெய் பூசியதும் வாயு கிடைப்பெறாமல் இறந்து போகின்றன.இதனால் சருமம் மூலம் பரவும் நோய் தொற்று தடுக்கப்படுகிறது.நோன்பு நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது என்பதை முன்னோர்கள்  கடைப்பிடித்துவந்தனர்.

இதன் காரணம் என்ன?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையே தவறு என்று  கருதியிருக்கும் நாம் அதில் இப்படி ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தி இருப்பதை  மூட நம்பிக்கை என்று நம்பினோம்.
ஆனால்   அ தற்கான அறிவியல் சான்று இப்போது ஆய்வின் மூலம் வெளி வந்துள்ளது. எண்ணெய் தேய்ந்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டு பிடித்திருக்கிறார்கள்.இவ்வளையம் இருப்பதால் கோள் களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது.
நோன்பிருக்கும் நாட்களில் உடல் மற்றும் மனது தூய்மை மிக முக்கியமானதால் கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும் பூமிக்கு வரும் காந்த அலைகள் உடலுக்கு மிகவும் அவசியம்.
இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணெய் தடையாக இருப்பதால் தான் அந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கை விடச்சொல்லி யுள்ளார்கள் நம் முன்னோர்.
முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல.

நான் சின்னவயதில் அப்போது பெரியவர்கள் நல்லெண்ணையுடன் வெள்ளைப்பூடு,வத்தல் போன்ற சில பொருட்களை சேர்த்து காய்ச்சி சற்று ஆறியவுடன் கொஞ்சம்  வெது,வெதுப்புடன் உடலில் தேய்த்து  சுட வைத்து குளிப்பதை பார்த்துள்ளேன்.எண்ணையை கணகளிலும்மூக்கு,காது போன்ற இடங்களில் விட்டுக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.
அதை பார்த்துப்பயந்தே எண்ணைக்குளியல் மீது ஒரு  ஒவ்வாமை என்னைப் போன்ற அன்றைய அடுத்த  தலைமுறையினருக்கு வந்து எண்ணைக்குளியலே இப்போது காணாமல் போய்விட்டது.
ஆனால் அப்படி எண்ணைக் குளியல் காரர்கள் வயாதான பிறகும் காது,கண் போன்ற உறுப்புகள் தெளிவாக வேலை செய்ததையும் ,கால்கள் -கைகள் வாத,மூஉட்டு வலிகள் இல்லாமல் இயங்கியதையும் பார்த்து வியந்திருக்கிறேன்.குறிப்பாக தலைமுடி நரையின்றி வளர்ந்ததையும் கண்டிருக்கிறேன்.இவைகள் எண்ணைக்குளியலின் பயங்கள்தான் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.
எண்ணைக்குளியல் அன்று மிளகு ரசத்துடன் சாப்பாடு கண்டிப்பாக இருக்கும்.குளியலன்று தாம்பத்யம் வைக்க கூடாது என்று சொல்ல கேள்வி .அப்படி வைத்தவர்களுக்கு சுகஜன்னி என்ற காய்ச்சல் வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

கடவுள் நம்பிக்கையுடன் இந்த எண்ணை தேய்ப்புக்குளியலை யும்  முன்னோர்கள் இணைத்துள்ளதால்தான் பலர் நம்பவும்,சிலர் மூட நம்பிக்கை என்று போகவும் வாய்ப்பாகி விட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline