ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன்

sasas

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் பிச்சை.பேரையூர் சின்னபூலாம்பட்டியில் ௩௦ ஏக்கரில் ததும்பி வழியும் கிணற்று தண்ணீரில் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை பயிர்களை பயிரிட்டு அசத்துகிறார். ‘விவசாயத்தில் ஜெயிக்கும் ௭௧ வயது இளைஞன் நான்’ என்று பேச ஆரம்பித்தார்.பாட்டன், முப்பாட்டன் சம்பாதித்த சொத்து இல்லை. மோட்டார் ரிப்பேர் வேலைக்காக வயல்களுக்கு செல்வேன்.

விவசாயிகளோடு நிறைய பேசுவேன். அப்போது தான் விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்தது.
சம்பாதித்த காசில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் வாங்கினேன். ௫௧ ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். தமிழகத்தில் கடும்பஞ்சம் வந்தபோது ஊரெல்லாம் ‘கப்பக்கிழங்கு’ பற்றி பேசினார்கள். ஆனால் என் வயலில் ரெண்டு ரூபா கூலிக்கு, அக்கம்பக்கத்து கிராமத்தினர் நூறு பேருக்கு வேலை கொடுத்தேன். இப்போ நூறுநாள் வேலை திட்டம் விவசாயிகளை சோம்பேறியா மாத்திருச்சு. ஆனா ஒருநாள் கூட நிலத்தை தரிசாய் விட்டதில்லை. ஜீப்பில் சென்றாவது வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்வேன்.
௨ ஏக்கரில் வாழை, ௧௫ ஏக்கரில் கரும்பு வெளையுது. ௨௦௦ இலவம்பஞ்சு மரங்கள், ௩௦௦ மா, ௪௫௦ எலுமிச்சை மரங்கள் மூலம் தனி வருவாய் கிடைக்குது. மலைக்கு கீழே இருப்பதால் தண்ணிக்கு பஞ்சமில்லை. ஆடு, கோழி வளர்க்கிறேன். தண்ணியே இல்லைனாலும் சாரநத்தி வேர், துளசி, நெருஞ்சிமுள், காட்டுமொச்சி,
கற்றாழை நட்டால் விவசாயி பிழைச்சுக்கலாம். சவுகரியத்தை விரும்பினால் கஷ்டம் தான். முயற்சி தான் முக்கியம்.பயிர்களுக்கு ஆட்டுசாணம், மாட்டுசாணம், குப்பை, யூரியா போடுவேன்.

பூச்சிமருந்து ஒருதரம் அடிச்சா பூச்சிகள் அதிகமா வருது. அதனால பூச்சிமருந்து அடிக்கறதில்லை.என் பிள்ளைங்க, பேரப்பிள்ளைங்க பெரிய படிப்பு படிச்சிருக்காங்க. அவங்களையும் விவசாயம் தான் பார்க்கணும்னு சொல்லிருக்கேன். ரெண்டு கிணறு தோண்டுனேன். ௬௫ அடி ஆழத்தில் தண்ணி வத்தாம கிடக்கு. இன்னொரு கிணத்துல தண்ணி வரல. அந்த கிணத்து தண்ணிய ௨௦ அடிக்கு இதுல நிரப்பியிருக்கேன். மண்ணை மாத்தணும்னு கண்மாய் மண்ணை அதிகாரிங்க கிட்ட மனு கொடுத்தா அலைய வைக்கிறாங்க. விவசாயத்துக்கு உதவாம வேறு யாருக்கு உதவி செய்வாங்களாம்.பொய் சொல்லாத, களவாணித்தனம் இல்லாத தொழில்னா அது விவசாயம் தான். அதனால் தான் எறும்பு, எலி, மயில், கிளி, பன்றி, பாம்புகள் எல்லாம் இயற்கையோடு சேர்ந்து வாழுது. பஞ்சாபில் இருந்து இங்க வந்து விவசாயம் செய்றாங்க. நாம ஏன் வெளிய போகணும். இருந்து சாதிப்பது தானே விவசாயம் என்றபடி, காலை சற்றே சாய்த்தவாறு நடந்து சென்றார் மைதீன் பிச்சை.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *