* இதில் இணைத்திருந்த ஓவியம் , உரிமையாளரின் விருப்பதின் பேரில் நீக்க பட்டது *
கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தழை சூடாவது அனைவரும் அறிந்ததே. நமது மூளை தலைக்குள் ஒரு திரவத்தின் உள்ளே மிதந்து கொண்டிருக்கிறது. அந்த திரவம் சூடேறினால் தலைவலி முதல் மூளை கோளாறு வரை அனைத்து வகை பாதிப்புக் வெப்ப அயர்ச்சியால் மூளை சாவும் கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு.அந்த திரவ படிமம் தலையின் முன்பாகம் (நெற்றி)துவங்கி பின்னால் வரை படர்ந்து உள்ளது.
நம் நாட்டில் உருமாலை கட்டு என்பது வெள்ளை பருத்தி நூலால் நெய்யப்பட்ட துண்டை கொண்டுதான் கட்டப்படும். உருமாலை கட்டு சரியாக அந்த திரவம் உள்ள பகுதிகளை முழுமையாக மூடிவிடும். அதுவுமன்றி வெள்ளை நிறம் என்பதால் தலையில் விழும் அனைத்து சூரிய வெப்ப கதிரையும் திருப்பி அனுப்பி விடும் (வெள்ளை நிறம் வெப்ப ஒளிக்கற்றைகளை 100% Reflect பண்ணும இயல்புடையது). அதுவுமன்றி ஈர்க்கப்படும் சிறு அளவு வெப்பமும் தலைக்குள் செல்லாதவாறு பல அடுக்கு பருத்தி துண்டு பார்த்துக்கொள்ளும்.
பருத்தியின் இயற்கையான குளிர்ச்சி, ஈரத்தை/ வியர்வையை உறியும் தன்மை போன்றவற்றால் கிடைக்கும் சுகம் அதை கட்டுவோருக்கே தெரியும்.
இன்று கடைகளில் கிடைக்கும் தொப்பிகள் தலையை கவ்வி நிற்கும் குளிர்சியற்ற தன்மை மற்றும் அதை அணிவதால் தலையில் ஏற்படும் வியர்வை போன்றவற்றை விட நமது உருமாலை எவ்வளவோ மேல். மேலும் தொப்பிகள் பெரும்பாலும் வெள்ளை நிறம் அல்லாது பிற வர்ணன்களிலேயே வருகிறது.
எல்லாவற்றையும் விட, உருமாலை நமது பாரம்பரியம் சொல்லும். நாமும் பயன்படுத்துவோம் !