உயிராற்றல் வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. மனிதன் இந்தப் பூவுலகில் மட்டும் உறுப்பினர் அல்ல. இந்த பிரபஞ்சத்திலும் அவன் ஒரு உறுப்பினர் என்பதை இதன் மூலம் ‘ ஸ்டெய்னர்’ உணர்த்தினார். இந்த பயோடைனமிக் எனும் வார்த்தை பயோடைனமோஸ் எனும் இரு கிரேக்க வார்த்தைகளடங்கியது. பயோஸ்-உயிர், டைனமாஸ்-சக்தி. ஆகவே நாம் இந்த முறையை ‘ உயிர்சக்தி’ வேளாண்மை எனக் கூறலாம்.மண்ணில் இரசாயனங்கள் அளவு எவ்வாறு அறியப்பட்டுள்ளதோ அது போன்று மண்ணில் வாழும் உயிரினங்களின் அளவுகளும் அறியப்பட்டுள்ளன. ஆகவே மண்ணின் தன்மை அதன் இரசாயன சக்திகளை விட, அதில் வாழும் உயிரிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக அளவில் மாறுபாடுகளை அடைகிறது. இக் கருத்தை விரித்தறிந்து செயல்படுத்துவதே ‘ உயிர்சக்தி வேளாண்மை ‘ முறை எனலாம்.ஆகவே மண்ணை உயிருள்ள ஒரு ஜீவனாக மதித்து அதைப் பராமரித்து அதில் விளைவிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவை அனைத்து உயிரினங்களும் உண்டு வாழ ஏற்படுத்தப்பட்டவழிமுறைகள் அடங்கிய கண்டுபிடிப்புகளே ’ உயிர்சக்தி வேளாண்முறை’ எனப்படுகிறது.இதில் முக்கிய பங்கு வகிப்பவை நுண்ணுயிர்த் தயாரிப்புகள் (BD Props ) இவை மண் தாவரங்கள், மிருகங்கள் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்றன. இந்த உயிராற்றல் வேளாண்மை முறை மண்ணில் நுண்ணுயிர்களின் அளவை மிக வேகமாக அதிகரிக்கச் செய்வதுடன் இந்தப் பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் இராசி மண்டலங்களிலும் மற்ற கிரகங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல்கள் (குறிப்பாகச் சூரியன் மற்றும் சந்திரனில் இருந்து வெளிப்படும் ஆற்றல்கள்) இணைந்து மண்ணை உயிருள்ளதாக மாற்றுகிறது.ஆகவே மண்ணில் ஏற்படும் இந்த மாறுதல்களுடன் பிரபஞ்ச சக்தியும் (Cosmic Energy) இணைந்து தாவரங்களையும் பிராணிகளையும் ஆராக்கியமானதாக மாற்றி அமைத்து உதவுகிறது.இந்த முறைகள் யாவும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் வேண்டுகோளுக்கு இணங்க திரு.ஸ்டெய்னர் அவர்களால் தொடர்ந்து எட்டு சொற்பொழிவுகள் (1924 ம் ஆண்டு மாதம் 7 ம் நாள் முதல் 16ம் நாள் வரை) நிகழ்த்தப்பட்டு அதன் மூலம் இயற்கையின் ஆற்றலுக்கும் மண்ணுக்கும் உள்ள தொடர்புகளைப் புரிந்து கொள்ள ஒரு பாலம் ஏற்படுத்தப்பட்டது. திரு.ஸ்டெய்னர் ஏற்படுத்திக்கொடுத்த வழிமுறைகள் மூலம் எவ்வாறு பிரபஞ்ச சக்தியும் மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களும் மறுபடியும் அதிக சக்திக்கான வளர்ச்சியை அடைகின்றன என்பதை நிரூபித்தார். இதன் மூலம் நவீன விவசாய முறைகளால் நாம் இழந்ததை வெகு விரைவில் திரும்ப அடையும் வழிமுறைகளை அடைந்துள்ளோம். இந்த உயிராற்றல் வேளாண்மை முறை 1990 ம் ஆண்டுக்கு மேல் இந்தியாவில் தொடங்கியது. 1993 ம் ஆண்டு திரு.T.K.G.மேனன் இந்தூரைச் சார்ந்த பெரிய மனிதரின் வேண்டு கோளுக்கிணங்க திரு.பீட்டர் ப்ராக்டர் எனும் நியூசிலாந்து நாட்டு விவசாயி (இவர் 165 ஆண்டு முதல் உயிராற்றல் வேளாண்மை முறையைக் கடைபிடித்து வெற்றி கண்டு வாழ்பவர்). இதனை விவரித்து உரைத்தார். இந்திய விவசாயிகளுக்கு இந்த முறைகளைக் கற்றுதர இசைவு தந்து இன்றளவும் (திருமதி. ராச்செல் பேலம் ராய் எனும் பெண்மணியுடன்) பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.சுமார் வருடம் இரண்டு முறையாவது இந்திய விஜயம் மேற்கொள்கிறார்.இதில் முதலில் இந்த முறையைக் கடைப்பிடிப்பது இன்றளவும் வெற்றிநடைபோடுபவர்கள் இந்தியாவில் சிங்கம்பட்டி எஸ்டேட் (ஊத்துக்குளி) பல்மாடிஸ் எஸ்டேட்(கூடலூர் ISKCW பண்ணை (மைசூர்) நந்தன்வன் எஸ்டேட் (கொடைக்கானல்),குறிஞ்சிப்பண்ணை (கொடைக்கானல்) மற்றம் பாய்காகா க்ரு-´ சேந்த்ரா (குஜராத்), பாய்க்கால் காட்டன் பிராஜக்ட் (மத்திய பிரதேசம்), அம்பூட்டியா, செளம்பாஸ், மக்காய்பாரி (டார்ஜிலிங்) போன்ற பகுதிகளாகும்.1999 ம் ஆண்டு இந்திய உயிராற்றல் வேளாண்மை அமைப்பு பதிவு செய்யப்பட்டு
உயிராற்றல் வேளாண்மைப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதுடன் ‘ டெமிட்டர் இன்டர்நேசனல் அமைப்பு ‘ போன்ற மற்ற அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உலகளாவிய வியாபார வளர்ச்சியையும், இந்த இயக்கத்தை வளர்ச்சி பெறச் செய்து இதன் மூலம் உயிராற்றல் வேளாண்மை முறையைப் பரவலாக அறியச்செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இன்றளவில் நம்நாட்டில் மூன்று முக்கிய அமைப்புகள் மூலம் சுமார் 3000 பண்ணைகளும் 500 பெரிய உணவு தானியங்கள் போன்றவற்றை உயிராற்றல் வேளாண்மை முறைகளைக் கடைப்பிடித்து உற்பத்தி செய்து கொண்டுள்ளது மிகவும் பெருமைக்குரியதாகும். சமீப காலங்களில் இந்த முறை மிகவும் வேகமாகப் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. உயிராற்றல் வேளாண்மை என்பது இயற்கை முறை வேளாண்மை முறையில் மேம்படுத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கியது. தற்போது இந்த வழிமுறைகள் உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வேகமாகப் பரவி வருகின்றன.இந்த வழிமுறைகள் மண்ணை வெகு விரைவில் வளப்படுத்துகிறது. மண்ணை மேம்படுத்துவது மட்டுமின்றி அந்த வளங்களை நிலை நிறுத்துகிறது. மண்ணின் வளம் குறையக் குறைய ஓரளவிற்குத் தானே ஈடு செய்து கொள்ளும் அளவிற்கு நுண்ணுயிர்ப் பெருக்கம் ஏற்படுத்துகிறது.மண்ணில் மக்குப் பெருக்கம் ஏற்படுகிறது.மண்ணில் மக்குப் பொருட்களின் அளவு கூடுவதன் மூலம் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது. இதன்மூலம் தாவரங்களின் வேர்களின் வளர்ச்சி அபரிதமாக அதிகரிக்கிறது. ஆகவே தாவரங்கள் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படுகின்றன.
இதனால் நோய் மற்றும் பூச்சிகள் நீர்ப்புச் சக்தி அதிகரித்து நமக்குத் தொல்லைகள் குறைகின்றன.நீர்ச் செலவு குறைகிறது. இதன் முடிவுகள் ஆரோக்கியமான உணவு மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் கிடைக்க ஏதுவாகிறது.மேற்கூறிய இந்த கருத்துக்கள் ‘ திரு.பீட்டர் பிராக்டர் ‘ அவர்களின் கூற்று என்பதோடல்லாமல் அனுபவ பூர்வமாக நாம் உணர முடியும்.ஆரோக்கியமான வாழ்வைத் தோற்றுவித்துப் பராமரித்தல் என்ற சக்தியுடன் இணைந்துநாம் கடைபிடிக்கும் வழிமுறைகளே உயிராற்றல் எனக் கொள்ளலாம் இந்தக் கருத்து திரு.ருடால்ப் ஸ்டெய்னர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளை முதன் முதலில் ஏற்றுக்கொண்ட விவசாயிகளின் கருத்தாக வெளிப்பட்டுள்ளது. அவர்கள் வைத்த பெயர்தான் இந்த’ பயோடைனமிக் விவசாயம்’ என்பது.மேற்கூறிய அனைத்து வழிமுறைகளுடன் மேலும் பயிர்ப்பாதுகாப்புக்காகவும் உடனடியாக உபயோகிக்கக்கூடிய சாணம் + மூத்திரம் + வெல்லக் கரைசல், புளிக்கவைத்த பால் போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.பயிர்ப்பாதுகாக்க (பூச்சிதாக்குதல் மற்றும் நோய்கள்) இவற்றுக்கான இயற்கைப் பூச்சி விரட்டிகள்,பூச்சிக் கொல்லிகள், நோய்த்தடுப்பு முறைகள் போன்றவையும் இயற்கை வேளாண்மை முறைகளில் கடைபிடிக்கப்படுகின்றன.இவற்றை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட உயிராற்றல் வேளாண்மை முறையின் மூலம் மண்ணை மட்டுமின்றி, காற்று மற்றும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தமுடியும் என்பதுநிரூபிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுயச்சார்பு அல்லது தற்சார்பு வழிமுறைகளே என உறுதியாகக் கூற முடியும். உயிராற்றல் வேளாண்முறையில் (2003 – ம் ஆண்டு காலண்டரின் பின் பகுதியிலிருந்து 5ம் பக்கம் முதல் தொடங்கவும்) இயற்கை வேளாண்மை முறைகளில் கால்நடைகளின் கழிவுகள் குவியலாகக் குவிக்கப்பட்டு,மக்கிய தொழுவுரம் தயாரிக்கப்பட்டு, மண்ணில் இடப்பட்டு, மண்ணின் வளம் மக்குப்பொருட்களின் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதனுடன் தாவரக்கழிவுகளும் சேர்க்கப்பட்டு மதிப்புக் கூட்டப்படுகிறது.
இதன் மூலம் நேரிடையாக மண்ணில் இடுவதன் மூலம் (பண்ணைக்கழிவுகள், கால்நடைக் கழிவுகள்) வீணாகக் கூடிய சத்துக்கள் மக்குப்பொருட்களுக்குள் ஏற்றப்பட்டு தாவரங்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் அளவில் மாற்றப்படுகிறது.இதனுடன் பல்வகைப்பட்ட கல்தூள்கள், ஆழமாகத்தோண்டி எடுக்கப்படும் மண், பசுந்தழை,உரப்பயிர்கள், கால்நçக் கழிவுகளாக இறைச்சிக் கழிவுகள், இரத்தம், தோல் கழிவுகள்,எலும்புகள், குளம்புகள், நீர்வாழ் உயிரனங்களின் கழிவுகள், கடல்பாசி வகைகள் போன்றவற்றையும்சேர்த்தால் மேலும் அதிகமாக நுண்ணுயிர்சத்துக்களைப் பெற முடியும்.மேலும் பயிர்ச்சுழற்சி முறைகள், ஒரே நிலத்தில் பலவகைபட்ட பயிர்வகைகளைப்பயிர்செய்தல் (ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ந்து வளர்ச்சி தரக்கூடிய பயிர்வகைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் போன்ற வழிமுறைகளின் மூலம்) மண்ணில் சத்துக் குறைபாடுகளைத் தவிர்க்க முடியும்.மணிச்சத்துக் குறைபாட்டிற்கு’ ராக் பாஸ்பேட்’ உபயோகித்து மக்கு உரம் தயாரிக்கலாம். குதிரைமசால் செடிகளில் மணிச்சத்து அதிகம் உள்ளதால் அதை நிலத்தில் விதைத்து வளரச் செய்து உழுது மடக்கி விட்டு மண்ணில் கலப்பதன் மூலமும் நிலைபெறச் செய்யலாம். சாம்பல் சத்திற்கு நேரிடையாகச் சாம்பல் மக்கு உரத்தயாரிப்பில் இட்டு உரம் தயாரிக்கலாம்.கோ கோ படி ஓடுகள். தென்னை ஓலை மட்டைகள் வாழைத்தண்டு, மஞ்சள்ப் பயிரின் சறுகுகள் இவற்றையும் உபயோகிக்கலாம். நிழலாக உள்ள இடத்தில் காம்ஃபிரே செடிகளை வளர்த்து மடக்கி உழுவதன் மூலம் உரம் தயாரிப்பதை அதிகரிக்கலாம்.சுண்ணாம்புச் சத்து நேரடியாக நீர்த்த சுண்ணாம்புத் தூளை நமக்கு உரத்தயாரிப்பில் இடுவதன் மூலம் சீர்செய்யப்படுகிறது.இவற்றின் மூலம் அவர்கள் அறிந்துகொண்டது இயற்கை முறை வேளாண்மை என்பது இயற்கையான இடுபொருட்கள் மட்டுமின்றி இதற்கெனத் தனியாக உள்ள வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் வெளிப்படும் சக்திகளையும் உதவியாகக்கொண்டு ஆரோக்கியமான உணவுகளை மனிதர்கள் மட்டுமின்றி அனத்து ஜீவராசிகளும் பெறமுடியும் என்பதாகும்.1920 களின் தொடக்கத்திலேயே விவசாயிகள் இரசாயனங்களின் தவறுகளை உணரத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அதற்கென உபயோகப் படுத்தப்பட்ட இரசாயனங்களைப் பூச்சிகொல்லிகளாகவும், உரங்களாகவும் உபயோகப்படுத்தலாம் என்ற ஆராய்ச்சி முடிவுகள் தோற்றுவித்ததன் விளைவுகளே இவற்றை அறியச் செய்தது.1960 ம் ஆண்டுக்கு மேல் மறுபடியும் பசுமைப்புரட்சி எனும் பெயரில் வீரிய வித்துக்கள்,தாவரங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இரசாயன உரங்களின் உபயோகம் மேலும் அதிக உரங்கள் அதிக செலவுகள் என விரிவடைந்து அதனால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு விளைச்சல் பாதிப்புகள் ஏற்பட்டதால் வருமான இழப்பு ஏற்பட்டது மட்டுமின்றி தரமற்ற உணவுப் பொருட்களால் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதிப்படைந்து சமூகச் சீறழிவு ஏற்பட்டுள்ளது. இது இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தமாக உள்ளது.
இதன்பிறகு கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக மட்டும் இந்த உயிராற்றல் வேளாண்மை முறைகளில் பிரபலம் அடைந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆகவே உயிர்ச் சக்தி நிறைந்த உணவுப்பொருட்களின் உற்பத்தியின் மூலம் ஆத்ம ஞானத்துடன் கூடிய விஞ்ஞான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக இயற்கையின் உயிராற்றல் திரும்ப நிலைபெறச்செய்வது என்னும் வழிமுறைகளே ஒரு ‘சுழற்சி முறை’ உயிராற்றல்வேளாண் முறையாகும்.அவை 1. பயிர்த்தொழிலின் செயல்பாடுகளை, குறிப்பாக விதை விதைத்தல், நாற்றுநடவு,நிலத்தில் உழவு, உரமிடல், பயிர்களின் மேல் திரவ உரங்கள் தெளிப்பு, நுண்ணியிர் மூலிகைத் தெளிப்பு, அறுவடை, கால்நடைகள் பராமரிப்பு, தேனிவளர்ப்பு போன்ற அனைத்து செயல்களையும்,சந்திரன் மற்றும் கிரகங்களின் நிலைபாடுகளைக் கணித்து அந்தந்த நாட்களில் குறிப்பிட்டுள்ள வேலைகளைச் செய்வதால் தாவரங்களில் மற்றும் மிருகங்களின் நோய் எதிர்ப்புச் சக்தி தோன்றுவதுடன் வளர்ச்சி வேகம் அதிகரித்து, ஆரோக்கியமான அறுவடை நமக்கு கிடைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
2 மாட்டுச்சாணம், கொம்புகள், போன்ற இதர உறுப்புகள் இந்த அண்ட வெளியில்
இருக்கும் கிரகங்களில் இருந்து வெளிப்படும் சக்தியினைக் கிரகித்துத் தரக்கூடிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நுண்ணுயிர்க் கலவைகள், அவற்றைப் பாதுகாத்து வைக்கும் முறைகள், அவற்றை உபயோகிக்கும் அளவுகள் மற்றும் அவற்றைப் பாதுகாத்து வைக்கும் முறைகள், அவற்றை உபயோகிக்கும் முறைகள் போன்றவை.அனைத்துக்கும் மேலாக பயிர்த்தொழில் செய்பவர் மற்றும் வேலை ஆட்களின் மனங்கள் ஒருங்கிணைந்த ஈடுபாடு, தாவரங்கள் மற்ற அனைத்து உயிரினங்கள் கால்நடைகள் மண்ணின் மீதுள்ள ஈடுபாடுகள் போன்றவை.அதாவது மனத்தளவிலான ஒருங்கிணைந்த ஈடுபாடுகள் (Spritina)
உயிராற்றல் வேளாண்மை பற்றிய புத்தகங்கள் அல்லது பயிற்சி வகுப்புகள் ஏதாவது உள்ளதா?? அப்படி இருந்தால் தகவல் கொடுக்கவும்.
Elangovan
9791589335.