இதில் பராசர முனிவர் கூறியுள்ள அளவுகள் அரைக் கட்டைவிரல் அளவு கோமயம், ஒரு பலம் கோமூத்திரம், ஏப்பலம் பால், மூன்று பலம் தயிர், ஒரு பலம் நெய், ஓரு பலம் தர்ப்பைஜலம் என்ற அளவுகளில் சேர்க்கப்பட வேண்டும். மேற்கூறிய பொருட்களை எந்த மாடுகளில் இருந்து பெறப்பட வேண்டும் என்றும் தயாரிக்கும் போது கூறப்பட வேண்டிய மந்திரங்களை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் எந்த நாளில் உபயோகித்தால் பலன்கள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது மந்திரங்கள் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகள் இல்லாவிட்டாலும் அவர் கூறியுள்ள அளவுகளில் பஞ்சகவ்யம் தயாரித்து உபயோகித்ததில் பயிர்கள் மட்டுமின்றி கால்நடைகள், மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்து மிகுந்த பலன்களைத் தருகிறது.
அடுத்ததாக, தயாரித்த அன்றே இதனை உபயோகத்தலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கின்றது. காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தேவையான போது கலந்து கொள்ளலாம்.
அதிகமாகக் கலந்தும் வைக்கலாம். இந்த அளவுகளை நடைமுறையில் கொண்டு வர
ஒரு ரூபாய் எடை ஒரு தோலா
மூன்று தோலா ஒரு பலம்
எட்டு பலம் ஒரு சேர்
ஐந்து சேர் ஒரு வீசை எட்டு வீசை ஒரு மணங்கு எனும் அட்டவனை மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
ஒரு மணங்கு என்பது பதினொரு கிலோ இருநூறு கிராம் அளவுக்குச் சமம்.
அதாவது இருபத்தெட்டு பவுண்டுகளுக்குச் சமம்.
இந்த அளவுகளைப் பாகுபாடு செய்தால் ஒரு பலம் என்பது சுமார் முப்பத்தைந்து
மில்லி அல்லது கிராம் எனக் கொள்ளலாம்.
அதாவது ஐந்து கிராம் அளவு சாணம்
முப்பத்தைந்து மில்லி மூத்திரம்
இருநூற்றைம்பது மில்லி பால்
நூற்றைம்பது மில்லி தயிர்
முப்பத்தைந்து மில்லி தர்ப்பைஜலம் என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.
இதில் முக்கியமாகக் கடைபிடிக்கவேண்டியவை கொம்புள்ள பசுமாட்டில் இருந்து இந்த பொருட்கள் சேகரிக்கப்பட வேண்டும்.
சாணம் புதியதாக ஈக்கள் மொப்பதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஈக்கள் அமர்ந்தால் அவை முட்டைகளை இட்டு விடும். அந்த முட்டைகள் புழுக்களாகி நாம் உபயோகிக்கத் தகுதி இல்லாமல் செய்து விடும்.நெய்யை மட்டும் லேசாக இளம் சூடாக இருக்கும் போது ஊற்றிக் கலந்து கொள்ளவும்.
தர்ப்பை ஜலம் என்பதைத் தயாரிக்கச் சிறிதளவு நீரில் நான்கைந்து தர்ப்பைப் புல்த் துண்டுகளை ( நுனியுடன் உள்ள பகுதி மட்டும்) அமிழ்த்தி வைத்திருந்து (ஒரு இரவு முழுவதும்) அந்த நீரில் தேவையான அளவு எடுத்துக் கலந்து கொள்ளவும். இதில் நாம் கவனிக்க வேண்டியவை பஞ்சகவ்யம் தயாரிக்கம் கூறப்பட்டுள்ள இடங்கள், உபயோகிக்கும் பாத்திரங்கள், உபயோகிக்கும் காலம், கலந்து தயாரிக்கும் முறைகள் ஆகிய இவை அனைத்தும் தற்போது உயிராற்றல் வோண்மையில், சாணமூலிகை உரம் கொம்புச்சாண உரம், கொம்புசிலிக்கா உரம், போன்றவற்றை உபயோகிக்கக் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் இரண்டும் ஓரளவு ஒரே மாதிரியாக இருக்கின்றன.
இதில் நமக்கு எளிதில் புலப்படக்கூடியது சதுர்த்தசியில் விரதம் இருந்து பெளர்ணமி அன்று பஞ்ச கவ்யம் இருந்ததினால் பலன் அதிகம் என்பது.
தற்போது மிகவும் பிரபலம் அடைந்துள்ள முறைப்படி பஞ்சகவ்யம் தயாரிக்க உயர்திரு டாக்டர் நடராஜன் கொடுமுடி அவர்கள் வகுத்துள்ள வழிமுறை.
ஐந்து கிலோ சாணம் (புதியது) சேகரித்து ஒரு மண்பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் மிதமான சூட்டில் ஒரு கிலோ நெய்யை ஊற்றி நன்றாகப் பிசைந்து வைக்கவும்
நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தினம் ஒரு முறை பிசைந்து வைத்திருந்து ஆறாம் நாள் அதனுடன் பால் ஐந்து லிட்டர், தயிர் மூன்று லிட்டர், மூத்திரம் ஐந்து லிட்டர், இளநீர் மூன்று லிட்டர், கரும்புச்சாறு மூன்று லிட்டர் அல்லது வெல்லம் கருப்பட்டி இதில் ஏதாவது ஒன்றில் அரைக்கிலோ அளவு, நன்றாகப்பிசைந்து கூழாக்கப்பட்ட வாழைப்பழங்கள் ஒரு கிலோ (சுமார் பன்னிரண்டு) ஆகியற்றைச் சேர்த்து அரைமணி நேரம் குச்சியால் கலக்கவும்.
இந்தக் கரைசல் கெட்டியாக இருந்தால் ஓரளவு (சுமார் ஐந்து லிட்டர் வரை) நீர் சேர்த்துக்கொள்ளலாம்.
தயார் செய்யப்பட்ட கரைசலை மேலும் பதினைந்து நாட்கள் வரை தினமும் இருமுறைகள் (ஒரு முறையாவது நன்றாகக் கலந்துவிடவும்)
அதன் பிறகு இந்தக் கரைசலில் மூன்று லிட்டர் எடுத்து நூறு லிட்டர் நீரில் அதாவது மூன்று சதவிகிதக் கரைசலாக வடிகட்டிப் பயிர்கள் மீது தெளிக்கலாம்.
மண்ணில் கலந்து விட ஐந்து முதல் பத்து சதவிகித கரைசலைத் தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் ரோஜாச் செடிகளில் தெளிக்கும் போது ஒரு சதவிகிதக் கரைசல் போதுமானது.
அதிகமானால் செடிகள் வாடுவதுஅறியப்படுள்ளது. தற்போது அளவுகள் மாற்றப்பட்டும், கள், பதநீர் திராட்சைச் சாறு, பழங்கள் போன்றவையும் அவரவர் வசதிக்கேற்றபடி மாற்றிக்கலந்து உபயோகித்ததும் நல்ல பலன்களைத் தருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
அது ஒவ்வொன்றிலும் பஞ்சகவ்யம் நீண்ட நாட்களுக்கு வைத்துப் பராமரிக்கக் கட்டாயம் தினமும் ஒரு முறை குச்சியைக்கொண்டு கலக்கி விடுவதால் நன்மை பயக்கும்.
ரோஜாச் செடிகளில் தெளிக்கும் போது ஒரு சதவிகிதக் கரைசல் போதுமானது.
அதிகமானால் செடிகள் வாடுவதுஅறியப்படுள்ளது. தற்போது அளவுகள் மாற்றப்பட்டும், கள், பதநீர் திராட்சைச் சாறு, பழங்கள் போன்றவையும் அவரவர் வசதிக்கேற்றபடி மாற்றிக்கலந்து உபயோகித்ததும் நல்ல பலன்களைத் தருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
அது ஒவ்வொன்றிலும் பஞ்சகவ்யம் நீண்ட நாட்களுக்கு வைத்துப் பராமரிக்கக் கட்டாயம் தினமும் ஒரு முறை குச்சியைக்கொண்டு கலக்கி விடுவதால் நன்மை பயக்கும்.
ஈக்கள், கொசுக்கள் மொய்க்காமல் மூடிவைப்பது நல்லது.
உடனடியாக ஒரு நான்கைந்து நாட்களுக்குள் ஊட்டச்சத்துக்களுக்காகவும், வளர்ச்சி ஊக்கிகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியது சாணம் ஐந்து கிலோ, மூத்திரம் ஐந்து லிட்டர், வெல்லம் இரண்டு கிலோ ஆகியவற்றைக் கலந்து நான்கு நாட்கள் தினமும் கலந்து விட்டு வைத்திருந்து பின்பு நூறு லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி ஸ்பிரே செய்யலாம். அப்படியே வடிகட்டாமல் மண்ணிலும் ஊற்றலாம்.
திரவ உரங்கள் தயாரித்து உபயோகிக்கும் முறைகள் ஏற்கனவே (உயிராற்றல் மூலிகைத்தயாரிப்புகளுடன்) கூறப்பட்டுள்ளது.
பப்பாளிப்பழம், மஞ்சள் பூசனிப்பழம், வாழைப்பழம் இவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்று கிலோ எடுத்துக்கொண்டு, மூன்று கிலோ வெல்லம் சேர்த்துக் கூழ்போல நீர்விட்டு கரைத்து மண்பானையில் இட்டு மூடி இட்டு மண்ணுக்குள் அல்லது எருக்குழியில் புதைத்து வைத்து இருபது முதல் முப்பது நாட்களுக்குள் எடுத்து நீரில் கலந்து வடிகட்டி, பயிர்கள் மேல் தெளிக்கவும், மண்ணில் விடவும் உபயோகிக்லாம்.
இதனால் நுண்ணுயிர்கள் பெருக்கம் மிகவும் அதிகரிக்கிறது.
பத்து லிட்டர் பால் மண்பானையில் ஊற்றி தினமும் இருமுறை கலக்கி விட்டுப் பத்து நாட்களுக்குப் பின்பு நூறு லிட்டர் நீர் கலந்து வடிகட்டி பயிர்களின் மேல் தெளிக்கலாம்.
நுண்ணியிர்கள் பெருக்கமடைவதுடன் தக்காளி மிளகாய் போன்ற பயிர்களில் கோடை காலங்களில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
ஈக்கள், கொசுக்கள் மொய்க்காமல் மூடிவைப்பது நல்லது.
உடனடியாக ஒரு நான்கைந்து நாட்களுக்குள் ஊட்டச்சத்துக்களுக்காகவும், வளர்ச்சி ஊக்கிகளுக்காகவும் பயன்படுத்தக்கூடியது சாணம் ஐந்து கிலோ, மூத்திரம் ஐந்து லிட்டர், வெல்லம் இரண்டு கிலோ ஆகியவற்றைக் கலந்து நான்கு நாட்கள் தினமும் கலந்து விட்டு வைத்திருந்து பின்பு நூறு லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி ஸ்பிரே செய்யலா