உணவே மருந்து – எப்போது?

உணவே மருந்து – எப்போது?

நன்றாக பசித்தபின்பு தான் சாப்பிட வேண்டும். பசி இல்லாத போது சாப்பிட வேண்டாம். பசிக்கும் போது சாப்பிடாமல் இருக்கவும் வேண்டாம்.ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவை சாப்பிட வேண்டும்.

அவசரம் அவசரமாக சாப்பாட்டை உள்ளே தள்ளக் கூடாது. நிதானமாக, நன்றாக மென்று, ஆற, அமர உட்கார்ந்து சாப்பிட வேண்டும். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று சும்மாவா சொன்னார்கள்?

சாப்பிடும்போது அதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டிவி பார்ப்பதோ, புத்தகங்கள் படிப்பதோ கூடாது. போனில் பேசுவதும் நல்லதில்லை.

எரிச்சலோ, கோபமோ, இயலாமையோ, குழப்பமோ என உணர்ச்சிக் குவியலாக இருக்கும்போது சாப்பிட வேண்டாம். அது உணவின் ருசியை மறக்கச் செய்யும்.

இரவு சாப்பிட்டவுடன் படுத்து விடக் கூடாது. சிறிது தூரம் உலாவி விட்டு வரலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் பின்னர் தூங்குவதுதான் நல்லது.

நல்ல உணவு கிடைக்காமல் உலகம் முழுவதும் பல பட்டினிச் சாவுகள் இன்றளவும் நடக்கிறது. எனவே ஒருபோதும் உணவை வீணாக்காதீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline