ஈ எம் பற்றி

ஈ எம் பற்றி

ஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம்…80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ,எம். .

இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம்,அசட்டோபேக்டர்,அசிட்டோபேக்டர்,ட்ரைகோடர்மா,சூடோமோனாஸ் போன்ற நுண்ணுயிகளும்.லேக்டிக் ஆசிட் பேக்க்டீரியா,ஈஸ்ட்,ஒளிச்சேர்க்கைக்கான பேக்டீரியா,ரே பூசணம்,ஆக்டினோமைசிட்ஸ் போன்ற நுண்ணுயிர்களும் உள்ளன…ஈஎம் பற்றி அறிமுகம் போதுமானது.இது கால்நடை வளர்ப்பில் என்ன வகையில் பயன் படுகின்றது என்பதை மட்டும் பார்க்கலாம்.

ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம்.இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம்.இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும்.இதனை வெளியில் வாங்குவது எளிது.
உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.

ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?

தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ

செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.

பயன் படுத்தும் முறை

இந்த இரண்டாம் நிலை திரவத்தில் ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து பயன் படுத்தலாம்.இது கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன் படும்.தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.தொழுவத்தின் துர்நாற்றம் குறையும்

ஈஎம் பொக்காஷி எனும் தவிடு உணவு தயாரிக்கும் முறை,தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில் ஏ.ஈ.எம் எனும் இரண்டாம் நிலை திரவத்தை தவிடு புட்டு பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் பிளாஸ்டிக் பாயில் கட்டி வைக்க வேண்டும்.ஒருவாரம் சென்றபின் திறந்து பார்க்கும் போது மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூசனம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி.இதனை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்…

ஒருலிட்டர் தாய் திரவம் சுமார் 300 ரூபாய் வரும்.இதனை சுமார் ஆறு மாதம் வரை பயன் படுத்தலாம்.இரண்டாம் நிலை திரவத்தை 30 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.வாங்கியவுடன் 1 லிட்டர் தாய் திரவத்தையும் பயன் படுத்த வேண்டாம்.நம்முடைய தேவை பயன் பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன் படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயார் செய்யுங்கள்..நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள்.

நான் எனது மண்ணில்லா தீவன வளர்ப்பிற்கும்,தொழுவத்தில் தெளிப்பதற்கும்.கோழிகளுக்கு குடிநீரில் கலப்பதற்கும் தொடர்ந்து பயன் படுத்துகின்றேன்..நல்ல பலன் தான் கொடுக்கின்றது…

2 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *