இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்

இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்

1458626_595748457170485_280630901_n

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இயற்கையான முறையில் தாந்தோணி என்பவர் வேளாண்மை செய்து வருகிறார் .நாங்கள் TWA சார்பாக பண்ணையை பார்க்க சென்று இருந்தோம் .தனி நபராக 16 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து வருகிறார் .நாங்கள் அங்கே சென்ற போது தன் வயல்களில் நவதானியங்கள் விதைத்து கொண்டு இருந்தார் .இந்த வயதிலும் கம்பீரமான உடல் கட்டமைபோடு ,புத்துணர்ச்சியோடு காணப்பட்டார் .ஒரு உழவனுகுரிய அதனை அம்சமும் அவரிடம் பொருந்தி இருந்து .காலம் காலமாக வேளாண் தொழில் ஈடுபட்டு வந்தாலும் ,கடந்த 5 வருடமாகத்தான் இயற்கை வேளாண்மையை செய்து வருகிறார் .நெல் வகைகளே அதிகமாக பயிரிட்டு வருகிறார் .

கிச்சடி சம்பா ,சேலம் சம்பா ,தூயமல்லி ,மைசூர் மல்லி ,ஒட்டு கிச்சடி ,சீரகசம்பா ,மாப்பிள்ளை சம்பா ,குள்ளகார்
என நமது பாரம்பரிய நெல் வகைகளை மிகவும் லாபகரமான முறையில் பயிரிட்டு வருகிறார். மேலும் நிலக்கடலை,கரும்பு போன்றவற்றையும் பயிரிட்டு வருகிறார் . தன் விளைபொருட்களை உள்ளூர் சந்தைகளில் ,குறிப்பாக உள்ளூர் மக்களுக்கே விநியோகம் செய்து வருவதால் அவரால் நல்லதொரு லாபத்தினை பெற முடிகிறது .ஜீவாமிர்தம் ,தேமோர்,மீன் அமிலம் போன்ற தயாரிப்பு முறைகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் .அவருடைய பேச்சில் அந்த அளவுகடந்த உழைப்பினை காண முடிந்தது .ஆனால் அந்த உழைப்பில் ஒரு பெருமிதமும் ,மகிழ்ச்சியும் இருந்ததை காண முடிந்தது .பின்னர் எங்களுக்கு நமது பாரம்பரிய உணவு முறையை பற்றியும் ,மருத்துவமுறை பற்றியும் எடுத்துரைத்தார் .

பண்ணைக்கு செல்ல விரும்புகிறவர்கள் தொடர்புக்கு : தாந்தோணி – 9381457817

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
என்ற வள்ளுவன் குறளுக்கு சான்றாக வாழும் ஒரு உழவரை சந்தித்த மகிழ்ச்சியோடு ,பல அறிய தகவல்களை பெற்றுகொண்டு விடைபெற்றோம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline