இயற்கை பூச்சிக் கொல்லி- Dr.Fly

சுகாதாரச் சீர்கேட்டிற்குக் காரணம் பூச்சிகள். ஈ, கரப்பான் பூச்சி…போன்றவைகளை நகரப் பகுதிகளுக்கு உதாரணமாக சொல்லலாம். கிராமப் பகுதிகளில் கால்நடைகளே பொருளாதாரம் என்பதால் அவற்றைத் தாக்கும் உண்ணி (ticks), பேன், 5 வகையான ஈக்கள், செதில் பூச்சி(mites), தெள்ளுப் பூச்சி(flea)… போன்றவைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்தும் உண்டாகிறது. இந்த அபாயகரமான நிலைமையை எதிர்கொள்வது மிகவும் எளிது என்கிறார் திரு.O.மகேஷ் அவர்கள். இவர் Dr. fly என்னும் இயற்கைப் பூச்சிக் கொல்லியைக் கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில விநியோகிஸ்தராக இருந்து, திருப்பூரில் தலைமை அலுவலகம் அமைத்து விற்பனையும் செய்து வருகிறார்.

பூச்சிகளால் நகரங்களில் ஏற்படும் பாதிப்புகள்

நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகவும் நெருக்கடியாகவும் இருந்து வருகிறது. இந்த நெருக்கடியில் சுகாதாரம் என்பது?இந்த சுகாதாரச் சீர்கேட்டினால் ஈ, கரப்பான் பூச்சி… போன்றவைகள் உருவாகின்றன. அடுமனைப் பொருட்களை தேடி, பேக்கரிகளுக்கும், சுவையான உணவு தேடி உயர்தர உணவகங்களுக்கும் செல்கிறோம். உணவுப் பண்டம் தயாரிப்புக் கூடம் என்றாலே பூச்சிகள் அதிகமாகவே வரும், உடன் தொற்று நோய்க் கிருமிகளும் வரும். இந்நாள் வரை தொற்று நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்க வேதியியல் பூச்சிக் கொல்லிகளே பெருமளவில் பயன்பாட்டில் உள்ளன.

வேதியியல் பூச்சிக் கொல்லி…

பேக்கரி, ஹோட்டல்… போன்ற இடங்களில் ஈக்கள், கரப்பான் பூச்சி… போன்றவைகள் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் முகம் சுளிப்பதுடன், வியாபாரம் பாதிக்கப்படுவதுடன், நோய் தொற்றும் ஏற்படுகிறது… போன்ற காரணங்களுக்காவே வேதியியல் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மறைமுகமாகத் தின்பண்டங்களிலும் கலக்கிறது என்பதே உண்மை. எப்படி என்று பார்ப்போம்?வேதியியல் பூச்சிக் கொல்லியை Liquid&Gas என்பவை Aerozone என்கிற பிரிவிலும், இயற்கை பூச்சிக் கொல்லியியை Liquid&Liquid என்பவை Emulasion பிரிவிலும் எடுத்துக் கூறுகிறார்.Liquid & Gas – Aerozone – இவைகள் காற்றில் கலக்கக் கூடியவை. உடனடி நிவாரணம் தரக்கூடியவை. இதன் மணம் மிகவும் விரும்பும்படியாக இருக்கும். இதன் விளைவு எண்ணிப் பார்க்க முடியாத அளவு கேடு விளைவிக்கும். எப்படி என்று பார்ப்போம்?
பூச்சிக் கொல்லிகள் வண்ண வண்ண டப்பாக்களில் அடைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு உள்ளன. இவைகளைப் பயன்படுத்தியே திண்பண்ட விற்பனை அங்காடிகளில் இருக்கும் கண்ணாடி செல்ப் முதல் தரை வரை, இருக்கும் ஈ மற்றும் கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்துகின்றது. இதனால் இடம் சுத்தமாக இருப்பது உண்மையே, சுகாதாரம்?

Aerozone ஸ்பிரே செய்யும் பொழுது கண்ணிற்குத் தெரிவதில்லை. உதாரணமாக கண்ணாடி செல்ப்களில் ஸ்பிரே செய்த உடன் பூச்சிகள் செத்து மடிகின்றன.அலங்கார அடுக்குகளில்அடுத்த சில நிமிடங்களில் தின்பண்டங்கள் வைக்கப்படுகின்றன. இது காற்றில் பரவக் கூடிய கேஸ் என்பதால் கண்ணாடி செல்ப்களில் இருக்கும் கேஸ்கள் தின்பண்டங்களிலும் படிகிறது. இதைத் தொடர்ந்து உண்டு வந்தால் புற்று நோய் விரைவில் வரும் என்பதே நிதர்சனம்.மற்றொன்று Liquid&Liquid என்பது Emulasion. இவை திரவ வடிவங்களாகும். இவைகளில் வாசம் இருப்பதில்லை. Dr.Fly இந்த வகையைச் சேர்ந்ததே ஆகும்.

கோழிப் பண்ணை

கோழிப் பண்ணைகளில் முக்கிய எதிரி ஈக்கள். இவைகளே நோய் பரப்பிகளாக உள்ளன. உதாரணமாகப்: பறவைக் காய்ச்சலைக் கூறலாம். ஈக்களைக் கட்டுப்படுத்த கோழியின் தீவனத்திலேயே பூச்சிக் கொல்லி (ஈக்களை கொல்ல) கலக்கப்படுகிறது. ஈக்கள் பெறுமளவில் உற்பத்தியாவதற்குக் காரணம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பண்ணைக் கழிவுகளை சுத்தம் செய்வதே ஆகும். இதைக் கட்டுப்படுத்தவே ஆரம்பகாலத் தீவனங்களில் பூச்சிக் கொல்லிகள் கலக்கப்படுகின்றன. பொதுவாகக் கழிவுகளில் உட்காரும் ஈக்கள் இனப்பெருக்கமடைந்து காற்றின் மூலமாகவும் நோய்களைப் பரப்பும். ஆனால் பூச்சிக் கொல்லி கலந்த தீவனத்தை உண்ட கோழிகளின் கழிவுகளில் ஈக்கள் உட்கார்ந்தாலும் இனப்பெருக்கமடையாமல் இறந்து விடுக்கின்றன. ஆபத்தான முறையில் பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படுவதால் இதில் உற்பத்தியாகும் இறைச்சி மற்றும் முட்டைகளில் நஞ்சு படிந்து விடுகின்றன என்பதே நமக்கு அதிர்ச்சி. உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மட்டுமே தற்போதய வியாபாரச் சந்தை உள்ளதையும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். இந்தப் படிமங்கள் நிறைந்த இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பவருக்கு அதீத விளைவுகள் ஏற்படுகின்றன.

மாட்டுப் பண்ணை

மாட்டுப் பண்ணைகளிலும் அதிக அளவில் பூச்சிகளைக் காணலாம். இந்தப் பூச்சிகள் பால் உற்பத்தியை பாதிப்பதுடன், நோய் ஏற்பட்டு சரிவர கவனிக்காமல் விட்டால் மரணிக்கும் சம்பவமும் நிகழ்கிறது. மாடுகளில் தெள்ளுப் பூச்சி, ஒட்டுண்ணி, ஈ… ஆகியவைகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக, நோயுள்ள மாட்டினைக் கடித்த தெள்ளுப் பூச்சி இன்னொரு மாட்டை கடித்தால் நோய் உண்டாகும். ஒரு உண்ணி தனது எடையை போல் 15 மடங்கு இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளும் ஆற்றல் மிக்கது. இளங்கன்றுகளுக்கு உண்ணி உயிர்க் கொல்லியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் வேதிப் பூச்சிக் கொல்லிகளை மாட்டின் கழுத்து வரை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்துவர். மாடுகள் தனது உருவத்தினை நாக்கால் சுத்தம் செய்யும் பொழுது இந்த வேதிப் பூச்சிக் கொல்லிகள் உடலுக்குள் செல்கின்றன. இதனைத் தொடர்ந்து, பாலுக்கும் வி­ம் வந்தடைகின்றது.

ஆட்டுப் பண்ணை

ஆடுகளைச் சுமார் 5 வகையான ஈக்களும், உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி, நொழஞ்சான் பூச்சி… போன்ற இதரவகைகளும் தாக்கி எடை இழப்பு முதல் உயிர் இழப்பு வரை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை விரட்ட வேதிப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இறைச்சியிலும் இதன் தாக்கம் வந்தடைகிறது.

பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள்

ஈக்கள் ஆடுகளின் மீது உட்கார்ந்து கடித்து இரத்தம் குடிக்கின்றன. சில ஈக்கள் முன்பே காயம் பட்ட இடங்களில் கசியும் இரத்தத்தை உறிஞ்சுகின்றன. கடித்து இரத்தத்தை உறிஞ்சும் ஈக்கள் உருண்டைப் புழுக்களின் வளரும் பருவங்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவச் செய்கின்றன. ஈக்கள் முக்கியமாக சாணக் குவியல்களிலும், சில அழுகும் பொருட்களிலும் பெருகுகின்றன.
பேன்கள் மற்றும் செதில் பூச்சிகள் முதலியன ஆடுகளின் தோல் மேலுள்ள உரோமங்களுக்கிடையில் வாழ்கின்றன. இவை தோலின் மேலுள்ள திசு அணுக்களை உண்டு பெருகுகின்றன. இதனால் முடிகள் தானாக விழந்து விடும். தோலில் எரிச்சல் உண்டாகும். எனவே மரங்கள் மற்றும் கட்டைகளின் மீது உடம்பைத் தேய்த்துக் கொள்ளும். இதனால் தோலில் காயங்கள் ஏற்பட்டு தோல் நோயாக மாற நேரிடும்.

உண்ணிகள் கால்நடைகளின் புற ஒட்டுண்ணிகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. முழுவதும் வளர்ந்த ஒவ்வொரு பெண் உண்ணி தினமும் சுமார் முக்கால் அல்லது ஒரு மில்லி லிட்டர் இரத்தத்தைக் குடிக்கும். குறைந்த இடத்தில் அதிகமான ஆடுகளை வளர்த்தால் இவ்வுண்ணிகளின் எண்ணிக்கை பெருகி இரத்த சோகை நோயினை ஏற்படுத்தும். மேலும், கம்பள உற்பத்தியும் அதன் தரமும் பாதிக்கப்படும். உண்ணிகள் தோலைக் கடித்துச் சேதப்படுத்துவதால் தோலின் மதிப்பு குறையும். ஒட்டுண்ணிகள் ஆட்டிற்கு ஆடு மாறி இரத்தம் உறிஞ்சும் போது வேறு நுண்ணுயிரிகளையும் பரவச் செய்து நோய்களை உண்டாக்குகின்றன.

நாசிப்பூச்சி என்பதும் ஒரு வகையான ஈ ஆகும். இவை முட்டைகளை ஆட்டின் மூக்குத்தூவாரத்தில் இடுகின்றன. இவை புழுக்களாக வளர்ந்து மூச்சுப்பாதையின் வழியே நுழைந்து அங்குள்ள பள்ளங்களில் தங்குகின்றன. இதனால் புண் உண்டாகி எரிச்சலும் வலியும் ஏற்படுத்துகின்றன. இதனால் நிமோனியாவும் உண்டாகின்றது.

இதுவரை, பூச்சிகள் மற்றும் வேதிப் பூச்சிக் கொல்லிகளால் எவ்வாறு பாதிப்பு உண்டாகிறது என்று பார்த்தோம். இனி ஆபத்தில்லா இயற்கை வழிப் பூச்சிக் கொல்லியின் பயன்களைத் தெரிந்து கொள்வோம்.

தயாரிப்பு முறை…

Dr.Fly இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. உதாரணமாக : சுரக்காய், அதிமதுரம், வேப்பங் கொட்டை மற்றும் பட்டை… மற்றும் நிறமி, பதப்படுத்துதல் போன்றவைகளுக்காகவும் சில வகையான உப்பு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பாதிப்பு பூச்சிகளுக்கு மட்டுமே

திரு.O.மகேஷ் அவர்கள் Dr.Fly பூச்சிகளுக்கு மட்டுமே ஆபத்தானவை என்றும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தானவை அல்ல என்கிறார். இதை நிரூபிக்கும் வகையில் நம் கண்ணெதிரே குப்பியின் சீல் உடைத்து குடித்தும் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆச்சரியம் அடைந்த நாம் எப்படி என்று வினா எழுப்பியபோது…

அவர் கூறியது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு சர்க்கரை ஓர் உயிர்க் கொல்லியாகும். மற்றொரு உதாரணமாக இரும்பை நெருப்பில் உருக்கினால் மட்டுமே வளைக்க முடியும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், கடப்பாரையை வாழைத் தண்டில் சொருகி 48 நாட்கள் ஆன பின்பு எளிதாக வளைக்க முடியும் என்று கூறி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும், தொடர்ந்து வாழைத் தண்டு சாறினை குடித்து வந்தால் உடலில் உள்ள எலும்பை உருக்கிவிடும் என்கிற செய்தியும் வழங்கினார்.

பயன்படுத்தும் முறை

ஒவ்வொரு பூச்சிகளுக்கும், இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்த வேண்டும். முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஸ்பிரே செய்யும் தொழில்நுட்பமே சிறந்த பொருளாதார பலனலிக்கும் என்றும் வழியுறுத்துகிறார் (இவை பெரிய பண்ணைகளுக்கும் பொருந்தும்).

தெள்ளுப் பூச்சிக்கு  – 1 மி.லி Dr.Fly, 7 மி.லி தண்ணீர்.
ஈக்கள்     – 1 மி.லி Dr.Fly,10 மி.லி தண்ணீர்.
கால்நடைகள் மீது ஸ்பிரே செய்யும் பொழுது 1 பங்கு Dr.Flyக்கு 7 பங்கு தண்ணீரும், தரை துடைப்பதற்கு 1 பங்கு Dr.Flyக்கு 10 பங்கு தண்ணீரும்  பயன்படுத்த வேண்டும்.

மேலும், தினந்தோறும் அல்லது அடிக்கடி சுத்தம் செய்யும் இடங்களில் உதாரணமாக ஹோட்டல் போன்ற இடங்களில் 10 மி.லி Dr.Flyக்கு 300 மி.லி தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இடங்களில் ஸ்பிரே செய்தால் 1 வாரம் வரை இதன் பயன் இருக்கும். உதாரணமாக, கால்நடைப் பண்ணைகளில் தரையைத் தினந்தோறும் சுத்தம் செய்வோம், ஆனால் அதன் சுவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வோம்.  இதுபோன்ற இடங்களில் ஸ்பிரே செய்யலாம். இந்த முறையை பயன்படுத்துவதால் பூச்சிகள் உடனடியாகக் கொல்லப்படுகின்றன.

முக்கிய கவனத்திற்கு…

வேதிப் பொருட்கள் பயன் படுத்திய இடங்களில் Dr.Fly வேலை செய்வதில்லை.
முன்பு பயன்படுத்தியிருந்தால் தண்ணீரில் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே இதனைப் பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொறு முறையும் பயன்படுத்திய பின்பும் குப்பியை நன்கு மூடி வைக்க வேண்டும். திறந்து வைப்பதனால் பூஞ்சாணம் உருவாகி கெட்டுப்போய்விடுகின்றது.

பயன்கள்

கரப்பான் பூச்சி, ஈ. உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி… போன்றவைகள் மீது தெளித்தாலோ அல்லது தெளிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாலோ பூச்சிகள் இறந்துவிடுகின்றன.
தொடர்ந்து பயன் படுத்துவதால் கால்நடைகளுக்கு எந்தத் தொற்று நோயும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் கால்நடைகளைத் தாக்கும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.
இதன் விலை, 100 மி.லி – ரூ.125/- , 500 மி.லி – ரூ.500/-, 5 லிட்டர் – ரூ.4,250/-.
வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள், வாத்துகள்… போன்றவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

மேலும் தொடர்புக்கு,
திரு.O. மகேஷ் – 95859 74854.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline