இயற்கையை சீரழிப்பதால் நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய்
இயற்கையை சீரழிப்பதால் நீரிழிவு மற்றும் உடல் பாதிப்புகள் நோய் போன்று நமது அன்றாட வாழ்வில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒரு விஷயத்தை மட்டும் பார்ப்போம் , பல்வேறு பெயர்களில் சந்தையில் விற்பனை செய்யப்படும் 300 ml குளிர்பானத்தை ஒரு மனிதன் பருகும்போது 10 ஸ்பூன் சர்க்கரையை அப்படியே சாப்பிடுவதற்கு இணையானது, இது ஒரு மனிதன் ஒரு நாள் இயங்க தேவையான ஆற்றலை அளிக்கும் , அச்சக்கரை ஒவ்வாமையால் வாந்தியாகாமல் இருக்க பாஸ்பேரிக் அமிலம் சேர்க்கப்படுகின்றது.
பாஸ்பேரிக் அமிலம்
பாஸ்பேரிக் அமிலம் நமது உடலில் என்ன பாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம் . இப்படி சேர்க்கப்படும் இந்த பாஸ்பேரிக் அமிலம் நமது ரத்தத்தில் கலந்து பின்பு அதற்க்கு இணையான அளவு கால்சியம் நமது எலும்புகளில் இருந்து பிரித்து விடும்.
பாஸ்பேரிக் அமிலம் நமது சிறுநீர் வழியாக வெளியேறும் பொழுது நமது உடலில் இருந்து பிரித்த கால்சியம் கலந்து வெளியேற்றும் . இப்படி தொடர்ந்து நடப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான கால்சியம் வெளியேறுவதால் நமது எலும்புகள் , பல் போன்றவை தனது பலத்தை இழந்து விடுகின்றது.
பெண்களுக்கு இந்த குறைபாடு ஏற்படுவதால் மிக அதிகமான விளைவுகளை இது ஏற்பத்துகிறது .இப்படி வாந்தியகாமல் இருக்க கழல்க்கும் ஒரு சிறு விடயத்தில் இப்படி எனில் இந்த குளிர் பானங்கள் இன்று இயல்பை பயன்படுத்த பழகி விட்டோம்.
நீரிழிவு ஏற்பட காரணமான ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சேர்த்தல் :
குளிர்பானத்தை குடித்த சில நிமிடங்களில் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும். அப்படி கலக்கும் சர்க்கரை இன்சுலினை உடனடியாக சுரக்க செய்து ஈரலை அடைந்து உடலில் வேறு வடிவில் சேர்ந்த சர்க்கரையுடன் சேர்ந்து கொழுப்பாக மாறுகின்றது.இப்படி மாறுகின்ற கொழுப்பு அன்றாட செயல்பாடுகளுக்கான தேவையான அளவு போக உடலில், ரத்த நாளங்களில் படிய துவங்கும்.
சில நிமிடங்களில் உடலில் சேர்ந்த சர்க்கரையின் அளவு கண்களை பாதித்து நமக்கு ரத்த கொதிப்பை அதிகரிக்கும், மூளையை எச்சரிக்கும் ஆற்றலை தடுத்து உடலை வேகமாக இயங்க செய்யும் , 2 மணிநேரத்தில் உடலில் உள்ள நீர்சத்துக்களை ( கழிவுகள் ) சிறுநீர் வழியாக வெளியேற்றும் , அவ்வாறு வெளியேறும் உடல் கழிவுகளில் சத்துள்ள ஆகாரங்களால் சேர்ந்த உடலின் நலத்திற்கு மிக அவசியமான சோடியம் உள்ளிட்ட தாது சத்துக்களும் குறிப்பாக எலும்புகளுக்கு சேரும் கால்சியம் , ஜின்க், மெக்னீசியம் போன்ற இன்றியமையாத தாதுக்கள் வெளியேறும்.
ஆகா இந்த குளிர்பானத்தை அருந்தும் நாள்பட்ட இந்த பழக்கத்தினால் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, எலும்பு சம்மந்தமான, பற்கள் சம்மந்தமான பல்வேறு நோய்களின் இருப்பிடமாக நமது உடல் மாறுகின்றது என்ற உண்மை எவ்வளவு பேருக்கு தெரியும்.
கஃபைன்
மேலும் இதில் கஃபைன் கலந்து உள்ளது என்று மிகவும் சிறிய எழுத்தில் அந்த குளிர்பானத்தில் ஆச்சிட பட்டும் உள்ளது .இந்த கஃபைன் மிகவும் அபதன ஒன்று. இது கர்ப்பிணிகள்,குழந்தைகளுக்கு தாய் பாலூட்டும் தாய்மார்கள் மேலும் குழந்தைகள் குடிக்கக் கூடாத அளவுக்கு அதிலுள்ளது .மேலும் இதில் வேறு ஏதாவது இருக்கிறதா? நிச்சயம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்த வகையான செயற்கைக் குளிர்பான உற்பத்தி நிறுவனத்துக்கே வெளிச்சம். இன்று செயற்கை பானங்கள் வயது வித்தியாசமின்றி அனைத்து எச்சரிக்கையை மீறி குழந்திகள் முதல் பெரியவர்கள் வரை செயற்கை குளிர்பானம் அனைவராலும் குடிக்கப்படுவதுதான் நிதர்சனம்
இதன் மூலம் நமக்கு நீரிழிவு நோய் பதிபடைகிறோம். இது பற்றி சிறிது விளக்கமாக காண்போம்.
டைப் 1 நீரிழிவு :
டைப் 1 முதலாம் வகை நீரிழிவு நோய் ( Type 2 Diabetes ) சில வகையான உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் ஒருவகை செல்கள் அழிக்க படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும் இன்னும் சிலருக்கு இன்சுலினை மிகவும் வீரியம் உள்ளதாக்க வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகுகிறது. இதற்கு சர்க்கரை அளவை தினமும் சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டு கொள்ள வேண்டும். இந்த முதலாம் வகை நீரிழிவு நோய் குழந்தைகளையும் இளவயதினரையும் தாக்கும்.
மேலும் இது மரபணு குறைபாடு, சுற்றுபுறம் மற்றும் உடலின் சுய நோய் எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு இதுவரையில் உலகில் எந்த விதமான மருத்துகளும் கண்டு பிடிக்க படவில்லை . உலகில் இப்பொழுதும் 5ல் இருந்து 10% நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.
டைப் 2 நீரிழிவு :
இரண்டாம் வகை நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% இவ்வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இது உணவு மற்றும் வாழ்வியல் முறையின் காரணமாக மட்டுமே ஏற்படுகிறது .குறைவான உடல் உலபில இருபவர்களுக்கு இந்தவகை மிக அதிகம் காண படுகிறது .இன்று பலருக்கு சர்க்கரை அளவு 400 முதல் 500 வரை மிக சாதரணமாக உள்ளது .இது கண் ,சிறுநீரகம் போன்றவற்றை மிக அதிக அளவில் பதிப்பை ஏற்படுத்தும்.
இந்த இரண்டாம் வகை நீரிழிவு நோய் ( Type 2 Diabetes ) இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பான்க்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, அதிக உடல் இயக்கம் (physical activity) இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.
குடும்பத்தில் ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்தால், அவர்களில் குடும்ப உறுபினர்களுக்கும் வரும் என்பது ஒருவகையான மூடநம்பிக்கை என்றே கூறவேண்டும் . உணவு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் நிச்சயம் கட்டுபடுத்த முடியும் .
டைப் 3 நீரிழிவு :
மூன்றாவது வகை நீரிழிவு ( Type 3 Diabetes ) நோய் பொதுவாக பெண்களுக்கும் கருத்தரிக்கும் போது வருகிறது . காரணம் சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் மற்றும் அவர்களின் உடல் மரபணு சார்ந்து ,உணவுமுறை ,வாழ்வியல் சார்ந்து இந்த வகை நீழிவு நோய் வர வாய்ப்புண்டு.குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு முன்றாம் வகை நீரிழிவு குணமாகிவிடும். மேலும் இது சிலருக்கு இரண்டாம் வகை நீரிழிவு மாறிவிடும் வைப்புகளும் உண்டு .
இன்றளவில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஒரு சோடா அல்லது கோலா சாப்பிடுபவர்கள் ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் பிரியாணிக்கும் சோடாவிற்கும் மட்டுமல்ல நீங்கள் கொடுக்கும் விலை உங்கள் ஆயுள் ஆரோக்கிய குறைபாட்டிற்கான விலையை அறியாமல் கொடுக்கின்றீர்கள்.
நீரிழிவு மற்றும் உடல் பயிற்சி
உடல் பயிற்சி செய்வதும் ஒரு நாளைக்கு 10000 அடிகள் எடுத்து வைப்பதும் உடல் நலனுக்கு மிக அவசியம் என்று பல இடங்களில் மருத்துவர்கள் பெருமளவில் சொன்னாலும், நமக்கு ஆர்வமிருப்பினும், இன்றைய வாழ்வியலில் வேலை நேரம், குழந்தைகளுடன் செலவிடும் நேரம் இவற்றிற்கு இடையே பல தூரம் சென்று உடற்பயிற்சி செய்வது கடினமாக இருந்திருக்கும்.அவ்வாறு பல தூரம் செல்ல ஒரு சோர்வு ஏற்படும் .அப்பொழுது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை வெளியில் அருகில் இருக்கும் இடங்களில் விளடுவதும் ஒரு சிறந்த பயிற்சி தான் . உங்களுக்கும் குழந்தைகளுக்குமான புரிதல் ஏற்படும் .
இதுவே ஒரு சமுதாயத்தில் பலருக்கும் விருப்பம் இருப்பின், பல புதிய உடற்பயிற்சியகங்கள் தேடி செல்வது வீண் செலவுகளே. நீங்கள் இப்படி நேரம் செலவு செய்வதை கண்டு அணடை அயலில் உள்ளவரோடு சென்று செய்வது மனதிற்கும் ஒரு வித புத்துணர்வை தரும்.
மக்களே சிறிது சிந்தித்து வாழ்வியலில் மாற்றங்கள் செய்து மிக பெரும் ஆனந்தமான வாழ்க்கை வாழ்வோம்