ஆகாச கருடன் கிழங்கு

ஆகாச கருடன் கிழங்கு.!

கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம்.

163

அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.

– சித்தர் பாடல்.

கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.

இந்த ஆகாச கருடன் கிழங்கு அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் வேலி ஓரங்களில் பூமிக்கு அடியில் கிடைக்கக்கூடியதாகும். இலையை அடையாளமாக வைத்து கிழங்கின் மீது காயம் படாமல் தோண்டி எடுக்க வேண்டும். (காயம் பட்டால் துளிர்க்காது) தெரியாவிட்டால் தெரிந்த விவசாய நணபர்களிடமோ, கிராம வைத்தியர்களிடமோ கேட்டுப் பெறலாம்..!

உண்மையிலேயே அற்புத சக்தியுடையதாகும்..!

One Response

  1. PRABAKAR 21/04/2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline