அரிசியும் சாத அளவும்
சில பாரம்பரிய அரிசி ரகங்களில் சிலவற்றை வேக வைத்தால் மூன்று முதல் ஐந்து மடங்கு சாதம் கிடைக்குமாம் .இந்த அளவுகள் அனைத்தும் நன்கு முற்றி நெல் மணிகளுக்கும் மட்டுமே பொருத்தும் . இது சார்ந்த விவரங்கள் மிகவும் பழைய சாஸ்திர நூல்களில் காணப்படுகிறது. மேலும் இந்த நெல் ரகங்கள் பற்றிய எந்த பெயரும் குறிப்பிடப்பட வில்லை . இதனை நாம் கண்டு பயன்படுத்தினால் இன்றய காலங்களில் மிகவும் பயன் பெற இயலும் .மேலும் இது போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை தேடி கண்டு ,அதனை மேலும் விதை விருத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் .மேலும் நன்கு முற்றாத சில பாரம்பரிய நெல் ரகங்களில்பாதி அளவோ அல்லது இரு மடங்கு அதிகம் உணவும் கிடைக்கும் ரகங்கள் உள்ளது எண்டு அறிகிறேன் .
எந்த விதமான நெல் ரகங்களில் இது போல அளவுகள் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் பகிரவும் .இவை அனைத்தும் பாரம்பரிய நெல் வகைகள் என்றும் கூறுகின்றனர் . இன்றைய களங்களில் இருக்கும் மேம்படுத்தப்பட்ட நெல் கைகளில் இதுபோல என்ன அளவுகள் கிடைக்கும் என்று அளவீடுகள் உள்ளதா? .இன்றைய காலங்களில் இருக்கும் குட்டை ரக நெல் ரகங்களை கொண்டு என்ன விளைச்சல் எடுக்க முடியும் ?
இன்றும் நாம் பலவகையான பாரம்பரிய நெல் ரகங்களை விளைவித்து பயன்படுத்தி வருகிறோம். இதுபோன்று விவரங்கள் கிடைக்கும் பொழுது உணவின் தேவைக்கு நாமே விளைவித்து பயன் அடைய முடியும் .
பலவகையான அரிசிகள் சாப்பிட்டு பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது.
பச்சரிசியின் நன்மைகள்:நெல் வேக வைக்காமல் அப்படியே கிடைக்கும் பச்சரிசியை சாப்பிட்டால் நமது உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மிகவும் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாக உள்ளவர்கள் , பச்சரிசி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடல் பருமனாகும். மேலும் வயிறு சம்பந்தமான மற்றும் உடலின் ஜீரண உறுப்புகளில் ஏதும் தொந்தரவு உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்த்து விடுவது நலம் .
சிகப்பரிசி : சிகப்பரிசி முகுந்த அளவு உடலுக்கு ஏற்ற உணவாக உள்ளது. இருப்பினும் , சிகப்பரிசியை பயன்படுத்தி உணவு பதார்த்தங்கள் தயாரிப்பது மிகவும் அரிது.இந்த அரிசியின் விலை சற்று கூடுதல் என்பதாலும், இதன் சுவையில் மற்ற உணவுகள் சேர்வதில்லை என்பதாலும், இந்தியாவில் இதனை உணவாக பயன்படுத்துவது மிகவும் குறைவு. மிக சில மாநிலங்களில் மட்டுமே இந்த சிகப்பரிசியை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
இதில் மிக அதிக அளவு நார்சத்து உள்ளது .இதனை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் சேரும் கொழுப்புகள் தவிர்க்கப்படுகிறது .இதில் அதிகம் எண்ணெய் தன்மை கொண்டது .இதன் மூலம் உடலுக்கு தேவையான கொழுப்புசத்து கிடைக்குறது .மேலும் இரத்த லுத்தம் குறைகிறது .இதனை உணவில் சேர்ப்பது மூலம் உடலின் ரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் தாமதமாக நடைபெறும் .அதுமற்றும் இல்லாமலா ஏராளமான உடலுக்கு நன்மை செய்யும் சத்துக்களும் கொண்டு உள்ளது .