நகைக் கடைக்குள் ஒருவர் வருகிறார்..
கடை ஓனர்: “வாங்க சார்..! வாங்க..! என்ன வாங்கப் பாக்குறீங்க..?”
வந்தவர்: “சார்..உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்..!”
“கேளுங்க சார்..!”
“சார்… இந்த அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு வாங்குனா வீட்ல ஐஸ்வர்யம் பெருகும்கிறது உண்மையா சார்..?”
“ஆமா சார்…! நிச்சயம்….!! நம்ம பழைய சாஸ்திரங்கள்ள சொல்லியிருக்கு சார்…! முன்னோர்கள் சொன்னதுல்லாம் பொய்யா போவுமா ..? ”
“இல்ல சார்… அது உண்மைன்னா அதுக்கு ‘reverse’சும் உண்மையாத்தான சார் இருக்கணும்..?”
“என்ன சொல்றீங்க..? புரியலயே..?”
“அதாவது… அட்சய திருதயை அன்னிக்கு கோல்டு வாங்குனா ஐஸ்வர்யம் பெருகும்னா, அன்னிக்கு கோல்டு ‘வித்தா’ வீட்டு ஐஸ்வர்யம் ‘குறஞ்சு’ போய்டாது..? அப்ப ஏன் சார் நீங்க அட்வர்டைஸ்மென்ட் எல்லாம் பண்ணி அட்சயை திருதயை அன்னிக்கு உங்க ஐஸ்வர்யத்த வெளில அனுப்பறீங்க..?”
Source : Facebook