அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

அகத்திக்கீரை பயிரிடும் முறை மற்றும் பயன்கள்

நமது தோட்டங்களில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டிய சில முக்கிய கீரைகளைப் பற்றி இன்று பார்ப்போம்

அகத்தி இலைக்கு மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது இதனால் வாரம் ஒருமுறை மட்டுமே கால்நடைகளுக்கு தீவனத்தில் கலந்து கொடுக்கவேண்டும் நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது உடல்நலத்தை பாதுகாக்க உதவும்

அகத்தி, செடி முருங்கை, கருவேப்பிலை ,புதினா,  தூதுவளை இவை மிகவும் மிக முக்கியமான கீரை வகைகள். இது நமக்கு மிக அற்புதமான உணவுகள்  பயன்படுத்தலாம். நாம் மட்டுமின்றி நமது கால்நடைகளுக்கும்  இந்த வகை கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் கொடுக்க முடியும்.

அகத்திக் கீரை வகைகள்  வேலி ஓரங்களில்ப்பகுதியிலும்  பயிரிடலாம். பொதுவாக கீரை வகைகள் நம் உடலில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும் உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளுக்கும் ஒரு சிறந்த உணவாகும்.

அகத்திக்கீரையில் உள்ள சத்துக்கள் பற்றிய விவரங்கள் , இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து போன்றவை மிக அதிகம் உள்ளது.

அகத்திக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்  உடலில் ஏற்படும் தேவையற்ற அரிப்புகள் நீங்கவும், வயிற்றில் உண்டாகும் புழுக்களை அழிக்கவும், மேலும் தாய்பாலை அதிகரிக்க செய்யவும் மிக முக்கியமாக, நமது வாய்ப்புண்ணை நீக்கும் குணம் கொண்டது இந்த அகத்திக்கீரை.இந்த அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை உண்டு  வந்தால் ஏற்படும் நன்மைகள். சிறுநீர் தடையில்லாமல் போகும் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது கண்கள் குளிர்ச்சி அடையும் உடல் சூடு குறையும் பித்தம் குறைந்து பித்த மயக்கம் ஆகியவை கட்டுப்படும் இதிலிருந்து அகத்திக் கீரை தைலம் தயாரிக்கப்படுகிறது. மிக முக்கியமாக  பத்தியம்இருப்போர் இந்த அகத்திக் கீரையை சாப்பிடுவது ஆகாது.

 

அகத்திக்கீரை பயிரிடும் முறை

அகத்திக்கீரையை ஒரு அடி முதல் 2 அடி இடைவெளியில் வரிசையாக விதைத்து வளர்க்கலாம் இதன் உயரம் 3 முதல் 4 அடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் ஒரு சிறிய புதர்போல வளர்க்க வேண்டும் . இதன் மூலம் அறுவடை செய்வது மற்றும் பராமரிப்பது போன்றவை மிக எளிதாக இருக்கும்.

அகத்திக்கீரை மரமாக வளரும் வகையைச் சேர்ந்தது அப்படி வளர்க்கும் பொழுது நாம் அதனை பராமரிப்பது மிக சிரமமாக இருக்கும் எனவே 3 முதல் 4 அடி இருக்குமாறு புதர் போல் வளர்த்து வருவதன் மூலம் பராமரிப்பது மிக எளிதாக இருக்கும் இதனால் அதன் நுனியை உடைத்து நாம் பராமரிக்க  வேண்டும்.

 இதிலிருந்து கிடைக்கும் இலை மற்றும் அகத்திப் பூ மிகச் சிறந்த உணவாகும் இதில் அதிக சத்துக்கள் உள்ளது மேலும் இது அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது இவற்றை நாம் மாடித்தோட்டத்தில்  தொட்டியில் வளர்க்கலாம் .

அகத்திக்கீரை விதை பெருக்கம் 

அகத்திக்கீரையை விதைகள் மூலமும் வளர்க்க முடியும் . அகத்தி செடியில் இரண்டு வகைகள் உள்ளன ஒன்று வெள்ளை மற்றும் சிவப்பு அகத்தி .

வெள்ளை அகத்தி

சிவப்பு அகத்தி 

 

அகத்திக்கீரை கால்நடை தீவனமாக 

அதேபோல கால்நடைகளுக்கும் ஒரு மிகச் சிறந்த உணவாக இருக்கும். இந்த  இந்த அகத்தியை ஆடுவளர்ப்பு , மாடுவளர்ப்பு  ,கோழி வளர்ப்பு , முயல் வளர்ப்பு , வாத்து வளர்ப்பு, பன்றி பண்ணை போன்ற பண்ணை விலங்குகளுக்கும்  கொடுக்கலாம் . அவ்வாறு கொடுக்கும் பொழுது அகத்தியின் முதிர்ந்த இலைகளையும் இளம் இலைகளை நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 

அகத்திக்கீரையை ஆங்கிலத்தில் Sesbania grandiflora  என்று அழைக்கப்படுகிறது

 

3 Comments

    • Pannaiyar 11/03/2020
  1. K.Yuvaraj 16/06/2022

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline