திருநீறு -vibhooti மிகச்சிறந்த உடல் காப்பான்

திருநீறு -vibhooti மிகச்சிறந்த உடல் காப்பான்

 

thiruneeru_2383053f

“திருநீறு”மிகச்சிறந்த உடல் காப்பான் அருமையான கை மருந்து…. இதை நுட்பமாக அனுகும் போது இதன் அறிவியல் தன்மை புலப்படும் ….

நீரில்லா நெற்றி பாழ்” என்பதன் அர்த்தம் நமது நெற்றியில் உள்ள ஆக்கினா சக்கரத்தை தூண்டி உடலுக்கு தேவையான சக்தி கிரகிக்கபடுகிறது விபூதி மூலமாக வள்ளலார் ஐயாவின் ஆனித்தரமான கூற்றை இங்கு கவனிக்கவேண்டும்

எப்பேர்பட்ட வயிற்று வலியையும் ஒரு சிட்டிகை திருநீறு தீர்த்து விடுகிறது பத்து நொடிகளில் ……எப்படி ?

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஏற்படும் கடும் மழையில் நனைந்து வந்தவுடன் திருநீறு பூசும் போது சளியோ,காய்ச்சலோ வருவதில்லை…..ஏன்?

திருநீறு தொடர்ந்து பூசுபவர்களுக்கு வெண்குஷ்டம் எனப்படும் குறைபாடு அறவே ஆண்டாது அதற்கும் காரணம் உள்ளது….

தலைக்கு குளித்தவுடன் பலருக்கு தலைவலி வரும் தலையில் நீர் கோர்த்து,அதற்கு திருநீறு பூசினால் தலையில் உள்ளநீரை வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கும் …

திருநீறு”அறிவியல் கண்ணோட்டமாக அணுகுவோம் 

உலோகத்தின் அயனி வடிவம் தான் சாம்பல் என்பது அனைவரும் அறிந்ததே மாட்டின் சாணம் எரித்து வருவது சாம்பல் இவற்றை எரிக்கும் போது சாணத்தில் உள்ள கார்பன் வெளியேறி விடும் உலோக அயனிகள் மட்டுமே மிஞ்சும் ….

உடல் என்பது ஒரு வேதியியல் தொழில் சாலை நாம் சாப்பிடும் உப்பில் உள்ள சோடியம் குளோரைடை சிதைத்து பொட்டாசியமாக உடலானது எவ்வாறு மாற்றுகிறதோ அது போல தான் மாடும் ரசவாதியாக செயல்படுகிறது

பூமியில் உள்ள தாவரங்கள் குறிப்பாக அறுகம்புல் உலோகங்களை அயனிகளாக மாற்றி தன்னகத்தே கொண்டு உள்ளது அதை சாப்பிடும் மாடுகள் தனது வயிற்றில் சுரக்கும் அமிலம் மூலமாக மேலும் அயனியாக மாற்றுகின்றது இந்த சாணத்தை பயன்படுத்தி விபூதி செய்து உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறோம்.  விபூதி ஒரு சிறந்த பற்பம் கழிவு நீக்கி.

இவற்றுடன் சேர்க்கபடும் திருநீற்றுபச்சிலை மற்றும் வில்வம் பழத்தின் ஓடு இவை இரண்டும் மிகச்சிறந்த மருத்துவ பண்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே…

திருநீறு எனப்படுவது ஏதோ வைதீக மரபு என்று சிலர் கருதுவதை உணர்கிறேன் வைதீக மரபானது நல்ல பல கலாச்சாரம் மற்றும் மரபு சார்ந்ததை தனதாக்கிக் கொண்டது என்பதே உண்மை……(மாட்டுகறி சாப்பிட்ட பிராமணர்கள் சைவத்தின் மதிப்பறிந்து அதை தனதாக்கிக் கொண்டது போல..)

தாம்பு ஓட்டுதல் எனப்படும் பழக்கம் எல்லா கிராமங்களிலும் 2000 வருடங்கள் வரை இருந்தன …. அப்போது அந்த நெல்லு கதிர்களையும் புல்லையும் பசு திண்று கொண்டே நடக்கும் களத்தின் வட்டபாதையில் அதுவும் கன்று ஈன்றாத கெடேரி எனப்படும் பசு உண்ணும் போது அது சாணமாக வெளிவரும் தாம்பின் பின் செல்பவர்கள் அவற்றை கையில் பிடித்து அவற்றை சேகரித்து அதனுடன் வில்வம் பழத்தின் ஓட்டையும் திருநீற்று பச்சிலை இரண்டையும் சேர்ந்து கையளவு உண்டையாக்கி வெயிலில் காய வைத்து அவற்றை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து நெல்லில் இருந்து பிரியும் பதர்களை கொண்டு மூடி தீயிட்டு புடம் போட்டு பக்குவபடுத்தி எடுத்து சேகரித்து வைப்பார்கள் சுறை குடுவைகள் அல்லது அதற்கென உள்ள பாத்திரத்தில் அவற்றின் இருந்து வீசும் மணம் ஏகாந்தமாக இருக்கும் பள்ளி முடிந்ததும் முகம் கழுவி அவற்றை எடுத்து பூசும் போது உணரபடும் ஒரு வித ஆனந்தம் ஆஹா !!!!!
அதை உணரவேமுடிகிறது சொல்ல தெரியவில்லை …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline