அறுபத்து நான்கு ஆயகலைகள்
கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன .
சித்தர்களின் அடிப்படையில் :
48 அருட்கலைகள்,
9 கடவுட்கலைகள்,
9 தெய்வீகக் கலைகள்,
9 நோய்க் கலைகள்,
9 பேய்க்கலைகள்,
9 தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
| எண் | தமிழ் விளக்கம் | வடசொல் |
| 1. | எழுத்திலக்கணம் | அக்கரவிலக்கணம் |
| 2. | எழுத்தாற்றல் | லிகிதம் |
| 3. | கணிதவியல் | கணித சாத்திரம் |
| 4. | மறை நூல் | வேத சாத்திரம் |
| 5. | தொன்மம் | புராணம் |
| 6. | இலக்கணவியல் | வியாகரணம் |
| 7. | நய நூல் | நீதி சாத்திரம் |
| 8. | கணியக் கலை | சோதிட சாத்திரம் |
| 9. | அறத்துப் பால் | தரும சாத்திரம் |
| 10. | ஓகக் கலை | யோக சாத்திரம் |
| 11. | மந்திரக் கலை | மந்திர சாத்திரம் |
| 12. | நிமித்தகக் கலை | சகுன சாத்திரம் |
| 13. | கம்மியக் கலை | சிற்ப சாத்திரம் |
| 14. | மருத்துவக் கலை | வைத்திய சாத்திரம் |
| 15. | உறுப்பமைவு | உருவ சாத்திரம் |
| 16. | மறவனப்பு | இதிகாசம் |
| 17. | வனப்பு | காவ்யம் |
| 18. | அணி இயல் | அலங்காரம் |
| 19. | இனிதுமொழிதல் | மதுரபாஷணம் |
| 20. | நாடகக் கலை | நாடக சாத்திரம் |
| 21. | ஆடற் கலை | நிருத்திய சாத்திரம் |
| 22. | ஒலிநுட்ப அறிவு | சப்த ப்ரம்மம் |
| 23. | யாழ் இயல் | வீணையிலக்கணம் |
| 24. | குழலிசை | வேணு கானம் |
| 25. | மத்தள நூல் | மிருதங்க சாத்திரம் |
| 26. | தாள இயல் | தாள சாத்திரம் |
| 27. | வில்லாற்றல் | அஸ்திர ப்ரயோகம் |
| 28. | பொன் நோட்டம் | கனகப் பரிட்சை |
| 29. | தேர்ப் பயிற்சி | இரதப் பயிற்சி |
| 30. | யானையேற்றம் | கஜப் பரிட்சை |
| 31. | குதிரையேற்றம் | அசுவப் பரிட்சை |
| 32. | மணி நோட்டம் | இரத்தினப் பரிட்சை |
| 33. | மண்ணியல் | பூமிப் பரிட்சை |
| 34. | போர்ப் பயிற்சி | சங்கிராமவிலக்கணம் |
| 35. | கைகலப்பு | மல்யுத்தம் |
| 36. | கவர்ச்சியியல் | ஆகரூடணம் |
| 37. | ஓட்டுகை | உச்சாடணம் |
| 38. | நட்பு பிரிக்கை | வித்வேடணம் |
| 39. | மயக்குக் கலை | மோகன சாத்திரம் |
| 40. | புணருங் கலை | காம சாத்திரம் |
| 41. | வசியக் கலை | வசீகரணம் |
| 42. | இதளியக் கலை | இரசவாதம் |
| 43. | இன்னிசைப் பயிற்சி | காந்தருவ வாதம் |
| 44. | பிறவுயிர்மொழி | பைபீல வாதம் |
| 45. | மகிழுறுத்தம் | கவுத்துக வாதம் |
| 46. | நாடிப் பயிற்சி | தாதுவாதம் |
| 47. | கலுழம் | காருடம் |
| 48. | இழப்பறிகை | நஷ்டம் |
| 49. | மறைத்ததையறிதல் | முஷ்டி |
| 50. | வான்புகுதல் | ஆகாய ப்ரவேசம் |
| 51. | வான் செல்கை | ஆகாய கமனம் |
| 52. | கூடுவிட்டு கூடுபாய்தல் | பரகாய ப்ரவேசம் |
| 53. | தன்னுறு கரத்தல் | அதிருசியம் |
| 54. | மாயம் | இந்திரஜாலம் |
| 55. | பெருமாயம் | மகேந்திரஜாலம் |
| 56. | நீர்க் கட்டு | ஜல ஸ்தம்பனம் |
| 57. | அழற் கட்டு | அக்னி ஸ்தம்பனம் |
| 58. | வளிக் கட்டு | வாயு ஸ்தம்பனம் |
| 59. | கண் கட்டு | த்ருஷ்டி ஸ்தம்பனம் |
| 60. | நாவுக் கட்டு | வாக்கு ஸ்தம்பனம் |
| 61. | விந்துக் கட்டு | சுக்ல ஸ்தம்பனம் |
| 62. | புதையற் கட்டு | கனன ஸ்தம்பனம் |
| 63. | வாட் கட்டு | கட்க ஸ்தம்பனம் |
| 64. | சூனியம் | அவஸ்தை ப்ரயோகம் |

