யார் ஏழை ???…!!

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..! சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த…

Continue reading →

தந்ரா தியானம்

★சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில் மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும் எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான். ★நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள் பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் என்ற ஏழாகும்….

Continue reading →

மூலிகை ஆர்வலர்

தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பால் உற்பத்திக்காக மட்டுமே கலப்பின மாடுகள் வளர்க்கப்பட்டு வருவதால், நாட்டு வகை மாடுகள் அழிந்து வருகின்றன.எனவே நாட்டு வகை மாடான உம்பளச்சேரி வகை மாடுகளை வாங்கி வளர்த்து வருகின்றார். மூலிகை ஆர்வலர். வேப்பூர் சடையானந்தம்….

Continue reading →

உடலின் 72000 நாடிகளையும்  வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு…

Continue reading →

சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற

சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா..!   ”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள். மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். … மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த…

Continue reading →

பூனை ………….

பூனை …………. மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர். பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக்…

Continue reading →

திருகைக்கள்

நம் கலாச்சாரத்தோடு இணைந்த ஒரு சாதனம் திருகைக்கள். குமரிமாவட்டத்தில் இதன் பெயர் திரிகள். காலமாற்றத்தால் தொலைந்துபோனது திருகைக்கள் மட்டும் அல்ல நம் ஆரோக்கியமும் தான்……..இதை மீட்டெடுக்க ஒவ்வொரு திருமண வீட்டிலும் இதை சீதனமாக கொடுக்க வேண்டும்………செய்வோமா தமிழா நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின்அனுபவம் உண்டா உங்களுக்கு.! திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று…

Continue reading →

திண்ணை

திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்கமுடியாது முன்னொருகாலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடுகட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம்வீட்டின் முன் கட்டி இருப்பர். திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். இது வீட்டின் முன் பகுதியில்அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும்.சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்கவிடுவதற்கும் வசதியான அமைப்பாகஅமைத்திருப்பர். இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத்தாங்கிக்கொண்டு இருக்கும். திண்ணையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு…

Continue reading →

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ?

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். . ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத…

Continue reading →

யார்தான் வெல்லக்கூடும் இயற்கையை ??

எவ்ளோ சாணி குட்டு இருக்கு? என் நண்பரின் தோட்டத்துக்கு போயிருந்தேன். பல விசயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 15 ஏக்கரா பூமி. 3 ஏக்கரா கொழுஞ்சியை உழுதுவிட்டிருந்தார்கள். 3 ஏக்கரா மசால்தழை. 1 ஏக்கராவில் தொய்யக்கீரை பள,பளவென்று வளர்ந்திருந்தது.4 ஏக்கரா மேட்டுப்பூமி. மீதி 4 ஏக்கரா கத்திரி,வெண்டையெனறு பல காய்கறிகள். முழுக்க இயற்கை விவசாயம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை அவர் அப்பா இரசாயன உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் செய்துவந்தார். என் நண்பர் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிததுவிட்டு இரண்டு…

Continue reading →