600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை
Pannaiyar
600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம்
தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர்
திரு.செ.சி.பவானந்தம்(9629601855), தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது ஆண்டு தனது தாயாரின் அஸ்தி கரைக்க கடற்கரை சென்றபோது பாம்பு கடித்து விட்டது, விசகடிக்கு சிறியநங்கை பொடி கடற்கரை பகுதி மக்களிடம் கேட்டபோது யாரும் கொடுக்க முன்வரவில்லை பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். குணமடைந்தவர் மூலிகை செடிகளை தேடி பயணிக்க ஆரம்பித்தார் வெற்றியும் கண்டார்.
இன்று அவரது பண்ணையில் 600க்கு மேலான மூலிகை செடி மற்றும் மரங்கள் உள்ளன 1000 மூலிகைக்கும் மேல் வளர்ப்பதே தனது விருப்பமாகக்கொண்டுள்ளார்.
மூலிகைகளின் பயனை தான்மட்டும் உணர்ந்தால் போதாது என்று பள்ளிமாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மூலிகை செடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே தனது தலையாயகடமை என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு பாடம் எடுத்துவருகிறார்.
திரு.பவானந்தம் அவர்களது பண்ணையில் உள்ள மூலிகைகள் சிலவற்றின்
ஆடாதோடை – காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும் சித்தரத்தை நெஞ்சுவலி போக்கும் சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்) – சர்க்கரைக் கொல்லி வாந்தி உண்டு பண்ணுவதற்கும் நெஞ்சில் உள்ள கோழையை வெளியேற்றி இருமலைக் கட்டுப் படுத்தவும், உணவுக் குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இலை பித்தம் பெருக்கும், தும்மலுண்டாக்கும்.நஞ்சு முறிக்கும். வேர் காய்ச்சல் போக்கும். சதை நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்.
இது சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மென்று துப்பிவிட்டு சக்கரையை வாயில் போட்டால் இனிக்காது மண் போன்று இருக்கும்.
நாகமல்லி பாம்பு விஷம் போக்கும் 7 வகை பால்மரம்: அத்தி, இத்தி, ஆல், அரசு, மா, பலா, கிலா