Site icon பண்ணையார் தோட்டம்

விவசாயம் காப்போம்- விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி

ஆர்கானிக் நெல் விதைகள்

விவசாயத்தில் திட்டமிட்டு விதை நேர்த்தி

 

விவசாயத்தில் திட்டமிட்டுவிதை நேர்த்தி செய்து செயலாற்றினால் அணைத்து விடயங்களிலும் வெற்றி பெறலாம் என்பது உண்மை .’உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கையும் மிஞ்சாது’ என்பது பழமொழி.

விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் விதை முதல் விளைச்சல் வரை பல்வேறு வகையான இடுபொருட்களான விதை, உரம், களைக்கொல்லி,பூச்சிவிரட்டி , பூச்சிக்கொல்லி போன்றவற்றிற்காக அதிகளவில் நேரம் மற்றும் பணம் செலவிடுகின்றனர்.

ஆனால்,  நிலத்தில் விதைக்கும் முன்பே சில இடு பொருட்களை கொண்டு சரியான முறையில் விதை நேர்த்தி செய்து உரமேற்றிய வீரியமிக்க விதைகளாக மாற்றி விதைப்பதன் மூலம் இடு பொருட்களுக்கான செலவினை குறைப்பதுடன் அதிக மகசூல் பெறலாம்.

விதை சேர்த்தி செய்த விதை என்பது விதையின் சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்தல் ஆகும்.

இதனால் நல்ல சீரான முளைப்புத்திறன், திடமான ஆரோக்கியமான விளைச்சல் , நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன், பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கான இடுபொருள் செலவு குறைவு, நிறைந்த மகசூல் என பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

Exit mobile version