கோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய் இயற்கை மருந்து

கோழி வளர்ப்பு – வெள்ளை கழிச்சல் நோய்

 

பண்ணை கோழி மற்றும் நாட்டு கோழி  வளப்பில் அதிகம் காணப்படும் நோய்வெள்ளை கழிச்சல்  ( ranikhet disease ). சுவாச நோய்கள் பற்றிய அறிகுறிகள் மற்றும் இயற்கையில் நோய் தடுப்பு முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் .

பண்ணை கோழி வளர்ப்பு

வெள்ளைக் கழிச்சல் நோய்  அறிகுறிகள்:

  •  கோழிகளின் எச்சம் வொள்ளை நிறத்தில் இருக்கும்
  • அதிக துர்நாற்றம் வீசும் .
  • கோழிகள் குறுகி அமைர்ந்தும் , அதிக சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழும் உறங்குவது போல ஒரே இடத்தில அமைந்து இருக்கும் .அல்லது தள்ளாடியபடி நடக்கும் .
  • தலையை இறகுபகுதிக்குள் வைத்து ,இறகுகள் சிலிர்த்தபடி இருக்கும்
  • உணவு மற்றும் தண்ணீர் எடுப்பது நிறுத்திவிடும் ,அதனால் உடல் மிக நலிவடைந்து எடை குறைந்து மெலிந்து இருக்கும் .

 

வெள்ளைக் கழிச்சல் நோய் 

வெள்ளைக் கழிச்சல் மருத்துவம்

கோழிகளுக்கு வைக்கும் குடிநீர் சுதமனதகை ருக்க வேண்டும் . இந்த தூய்மையான  குடிநீரில் 1 சதவீதம் படிகாரம் ,பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்து 3 முறை கொடுக்கவேண்டும் . இதன் மூலம் இந்த வெள்ளை கழிச்சல் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பில் கழிச்சல் ( Ranikhet disease ) அறிகுறிகள்

 

  • கோழிகள் எச்சம் பச்சை நிறத்தில்  துர்நாற்றத்துடன் இருக்கும் .
  •  கோழிகள் இறக்கும் விகிதம் அதிகமாகும் .

Ranikhet disease

இயற்கை முறையில் மருத்துவம்

 

இதற்கு கீழாநெல்லி , நெல்லிக்காய்,அருகம்புல், ஆவாரம்பூ , வெங்காயம்,  தலா 50 கிராமும் , கற்கண்டு ,கஸ்துாரி
உப்பு , மஞ்சள் தலா 10  கிராம்  என்ற வீதத்தில் அரைத்து குடிநீரில் கலந்து 15 முதல் 20 நாட்கள் கோழிகளுக்கு கொடுக்க குணமாகும்.

நாட்டுக்கோழி கழிச்சல் ( Country chicken  Ranikhet disease )

 

இதற்கு நற்சீரகம் 10 கிராம் அரைத்து கொடுக்க உடன் குணமாகும்.

கோழிகளுக்கு ஏற்படும் சுவாச நோய்கள்

 

பண்ணைகளில் இருக்கும் கோழிகள் தீவனம் எடுக்காது . இதன் காரணமாக அவற்றி எடை பெருமளவில் குறையும் . கோழிகளின் மூக்கில் சளி ஒழுகும். மேலும் பிடித்து நமது காதருகில் வைத்து கேட்டல் கோழிகள் குறட்டை விடுவது போன்று இருக்கும் .

 

சுவாச நோய்கள் இயற்கை மருத்துவம்

பத்து கோழிகளுக்கு மருந்து அளவு:

50 கிராம்  மூலிகை செடியான செந்தட்டி வேரை பொடி செய்து 10 கோழிகளுக்கான தீவனத்தில் 2 நாட்கள் கொடுக்கலாம்

அல்லது

சுத்தமான குடிநீரில் 10 கிராம் துளசியை கலந்து கொடுத்தாலும் சளி குணமாகும்

 

சுவாச நோயினால் ஏற்படும் சளியை குறைக்க மருத்துவம்

சுகாதாரமான  தண்ணீரில் கருப்பட்டி100 கிராம் அல்லது  பனங்கற்கண்டு 100 கிராம் கலந்து கொடுத்தால் கோழிகளுக்கு ஏற்படும்  சளி குறையும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline