Site icon பண்ணையார் தோட்டம்

வாத்துக்கள்,கோழிகள்

pannaiyar-poultry-farming-EM-usage

கோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும்

நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் .

கோழிகளின் முக்கிய உணவு :

தண்ணீர் தான்

 

எப்பொழுது எல்லாம் தண்ணீர் தேவை

  1. உணவு உண்டவுடன்
  2. அதிக வெயில் நேரத்தில் ஏற்படும் ,அதிக உடல் வெப்பத்தை  குறைக்க
  3. முட்டை இட்டவுடன்
  4. இரவில் வெளிச்சம் குறையும் முன்
  5. காலை வெளிச்சம் வந்தவுடன்

எந்தவிதனமான குடிநீரை கோழிகளுக்கு கொடுக்கலாம்

  1. சுத்தமான நீரை கொடுக்க வேண்டும்
  2. வெயில் காலத்தில் மண் பத்திரத்தில் தண்ணீரை வைக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் வெப்பஅழற்சி நோயில் இருந்து கோழிகளை பாதுகாக்க முடியும் .
  3. சிறிது ஐஸ் கட்டிகள் கலந்தும் வைக்கலாம் .இதன் மூலம் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தின் அளவை குறைத்து கொலைகளில் உடல் நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது .

 

தண்ணீர் மூலம் பரவும் கோழிகளுக்காண நோய்கள்

  1. ரத்தக் கழிச்சல்,
  2. சால்மனெல்லோசிஸ்,
  3. கோவிபேசில்லோசிஸ்.

 

தண்ணீர் கொடுக்கும் பொழுது கவனிக்கவேண்டியவை

கீழ்கண்ட விடயங்களில் கவனமாக இருக்கவேண்டும் .

  1. பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்திய பாத்திரங்கள்
  2. பெயிண்ட் அடிக்கப்பட்ட பாத்திரங்கள்
  3. துரு பிடித்த இரும்பு
  4. சுகாதாரமற்ற பத்திரங்கள்

 

நன்றி

டாக்டர்.வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை

Exit mobile version