Site icon பண்ணையார் தோட்டம்

வராக குணபம்! – கரைசல்

வராக குணபம்!

பன்றி இறைச்சி-3 கிலோ, தேன்-200 மில்லி, நெய்-500 மில்லி, பால்-2 லிட்டர், தயிர்-2 லிட்டர், பசுவின் சிறுநீர்-5 லிட்டர், சாணம்-3 கிலோ, பப்பாளிப்பழம்-3 கிலோ, வாழைப்பழம்-3 கிலோ, திராட்சைப்பழம்-3 கிலோ, இளநீர்-2 லிட்டர், ஆட்டு உதப்பை-2 கிலோ, கருப்பு உளுந்து-2 கிலோ, கருப்பு எள்-500 கிராம், அதிமதுரம், வெண்கடுகு, வாலிவிடங்கன் ஆகியவை தலா 200 கிராம்.

தயாரிப்பு முறை

6 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ பன்றி இறைச்சியை வேக வைத்து, அதில் தேன், நெய் இரண்டையும் கலந்து ஆற வைக்க வேண்டும். பிறகு, அதை, ‘பிளாஸ்டிக் டிரம்’மில் இட்டு, பால், தயிர், பசுவின் சிறுநீர், சாணம், இளநீர், ஆட்டு உதப்பை, பிசைந்த வாழைப்பழம், பப்பாளி, திராட்சை, பொடித்த வெண்கடுகு, அதிமதுரம், வாய்விடங்கன், முளை கட்ட வைத்து, அரைத்த உளுந்து மற்றும் எள் ஆகியவற்றை இட்டு 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி தினமும் காலை, மாலை கலக்கி வந்தால்… 21 நாட்களில் கரைசல் தயாராகி விடும். இதை, 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை வைத்திருக்கலாம்.

10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கரைசலைக் கலந்து பயன்படுத்தலாம். இது, வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும் பயன்படுவதோடு, பயிர்களில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

Exit mobile version