Site icon பண்ணையார் தோட்டம்

மருதாணி என்ற மூலிகை

மருதாணி என்ற மூலிகையை தெரியாத பெண்களே இருக்கமாட்டார்கள். பெரும்பாலான பெண்கள் அழகுக்காக மட்டும் பயன்படுத்தினாலும் உண்மையில் இதற்குள் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
கூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.


ஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும்.


இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.


மருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.


கால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.


காலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.

Exit mobile version