மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்

மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்

மனிதன் நினைப்பதில் முட்டாள்தனமான ஒரு விசயம்” தான் வாழ வேறு எந்த உயிரினமும் தேவை இல்லை” என்பதுதான்.ஆனால் உண்மை நிலவரம் வேறு. இந்த பிரபஞ்சத்தில் மனிதனை நம்பி எந்த உயிரினமும் இல்லை, ஆனால் மனிதன் எந்த உயிரினத்தையும் சாராமல் வாழ முடியாது என்பதே நிதர்சனம்.
விவசாயம் என்பது என்ன? பயிர் வளர்த்தல், பயிர் வளர மண் வளப்பட வேண்டும், மண்ணிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும், செயற்கை உரங்கள் மண்ணின் தரத்தையே கெடுக்கின்றன. மண்ணிற்கு நிரந்த வளமளிக்க கூடியது மண் புழு மட்டுமே.
தற்போதைய விவசாய முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவரான திரு சுரேஷ் பாலேகர் மண்புழு பற்றிய விவரங்களை பசுமை விகடனில் வெளியிட்டுள்ளார். அவையாவன

மண்புழு பற்றிய டிப்ஸ்:
மண்புழுக்கள், அள்ள அள்ளக் குறையாமல் மண்ணில் பொதிந்து கிடக்கும் சத்துக்களை வெளியே கொண்டு வந்து பயிர்களுக்குக் கொடுக்கும். காசில்லாமல் வேலையைச் செய்யும் ஆட்கள் தான் இந்த மண்புழுக்கள்.

மண்புழுக்கள் இருட்டை விரும்பும். அதனால் தான் மண்ணின் அடி ஆழத்தில் சென்று வாழுகின்றன.
மேல் மட்டத்தில் உணவும், வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையும் இல்லாத போது அவை மண்ணுக்குள் புகுந்து விடுகின்றன.
மண்புழுக்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய ஆற்றல் நாட்டு மாட்டின் சாணத்தில் மட்டுமே உண்டு.
இந்தச் சாணத்தை மண்ணின் மீது வைத்து விட்டாலே போதும். நம் பயிருக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகளைச் சாப்பிடும்.
பொழிகின்ற மழை நீர், இதன் காரணமாக உங்கள் நிலத்தில் இறங்கி நீர்மட்டம் உயரும்.
பயிருக்கு வேண்டிய சத்தான உரத்தை ஒரு பக்கம் கொடுப்பது மட்டுமல்லாமல், நீர்ச்சேமிப்புக்கும் அவை உதவுகின்றன.
மண்புழுக்களின் உடல் மீது நீர்ப்பட்டால் அதுவும் உரமாக மாறி விடும். இதை வெர்மிவாஷ் என்று சொல்கிறார்கள். பயிர்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் திறனும், அதிகமாக காய்ப்பிடிக்க வைக்கும் தன்மையும் இந்த வெர்மிவாஷீக்கு உண்டு.
மண்ணில் இயற்கையாகவே உள்ளச் சத்துக்களை மண்புழுக்கள் மேலே கொண்டு வந்து சேர்க்கின்றன.
சுமார் 15 அடி ஆழம் வரை அவை சர்வ சாதாரணமாக சென்று வருகின்றன. 7 அடி ஆழத்தில் தழைச்சத்து உள்ளது.
மண்ணிற்கு அடியில் பாஸ்பரஸ் இருக்கிறது. 11 அடியில் சாம்பல் சத்து இரும்பு, 10 அடியில் கந்தகம் எனச் சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை மேலேக் கொண்டு வந்து சேர்க்கின்ற உன்னதப் பணியினை இந்த மண்புழுக்கள் செய்கின்றன.
ஒரு சதுர அடி நிலத்தில் நான்கு மண்புழுக்கள் இருந்தால், ஒரு ஏக்கரில் 2 லட்சம் எண்ணிக்கையில் மண்புழுக்கள் இருக்கும்.
ஏக்கருக்கு 200 டன் கரும்பு, 120 குவிண்டால் நெல், 120 குவிண்டால் கோதுமை, 120 குவிண்டால் கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற தானியங்கள், 40 முதல் 80 டன் வரை காய்கறி, பழங்கள் என்ற எல்லாமும் விளைந்து கொழிக்கும்.
மண்புழுக்களை அதிகமாகப் பெருக்கவேண்டும் என்றால் நாட்டுப் பசுமாடு அவசியம். நாட்டு மாட்டுச் சாணத்தில் மட்டுமே மண்புழுக்கள் அதிக அளவில் பெருகும். நாட்டு மாடு நாள் ஒன்றுக்கு 11 கிலோ சாணம் கொடுக்கும். இதை வைத்து 30 ஏக்கர் நிலம் முழுக்க விவசாயம் செய்ய முடியும்.
மாட்டின் சிறுநீர், நாளாக நாளாகத்தான் அதிகப் பலன் கொடுக்கும். பொதுவாகச் சாணத்தை 7 நாட்களுக்குள் பயன்படுத்தினால் தான் பலன் உண்டு. ஒரு ஏக்கருக்கு 5 முதல் 10 லிட்டர் கோமியம் இருந்தாலே போதுமானது.
இயற்கை விவசாயத்தினை பரவ செய்வதன் மூலம் நம் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும், அப்படி உயர்ந்தால் ஒளிய நாடு முன்னேர வேறு வழியில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline