மண் வளம் மேம்படுத்துதல்

பல தானிய விதைப்பு மூலம் மண் வளம்

மேம்படுத்துதல் எப்படி?

 

மண் வளம் மேம்படுத்துதல்

இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் .

இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்க படும் . இதனை கலந்து விதைக்கலாம் .மேலும் இது இரு அருமையான பசுந்தாள் உரமும் ஆகும் .இது ஒரு மிகசிறந்த முதல் முயற்சி ஆகும். ரசாயன விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயம் செய்யும் முறைக்கு நமது நிலத்தை தயார் செய்ய இந்த பலதனிய விதைப்பு மிகவும் முக்கியம் ஆகும் .

நவ தானியங்கள் விதைப்பு நமது பரம்பரியமுறை . எடுத்துக்காட்டு நமது முளைப்பாரி திருவிழா .

 

// மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு //

இதில் சொல்லப்பட்டுள்ளது

பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு சரியான விளக்கம் என்று எண்ணுகிறேன் .

இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திக்கு உண்டானது .

பல வகை தானிய பயிர்கள்

 தானியப்பயிர் 4
சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயிறு வகை 4
உளுந்து 1 கிலோ
பாசிப்பயறு 1 கிலோ
தட்டைப்பயிறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

பசுந்தாள் பயிர்கள் 4
தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பை 2 கிலோ
நரிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப்பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 45 முதல் 50 நாட்களில் மடக்கி உழ வெண்டும்.மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline