Site icon பண்ணையார் தோட்டம்

மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது?

மண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

வேம்பு இலை 50 கிராம்
எருக்கு இலை 50 கிராம்
நொச்சி இலை 50 கிராம்
பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு) 50 கிராம்
தயிர் அல்லது அடர்த்தியான மோர் 1 லிட்டர்
தண்ணீர் 1.5 லிட்டர்

தயாரிக்கும் முறை:​​

முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும். பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்

Exit mobile version