Site icon பண்ணையார் தோட்டம்

பறவைகளுக்கு வெயில் கால உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்

 

வெயில் கால உணவு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள்

1. தினமும் குடிக்கும் தண்ணிர் மாற்றி விடவேண்டும் .

2. தினை, கம்பு, வரகு, சூரியகாந்தி விதை கலவை, சுண்ணாம்பு கல், கடம்பா மீன் ஓடு எப்பொழுதும் கூண்டில் இருக்க வேண்டும்.

3. வெள்ளரி (இரண்டு பங்கு ), கேரட், பீட்ருட் ,முள்ளங்கி இவற்றை நன்கு துருவி தினமும் கொடுப்பது நல்லது.முந்தயநாள் வைத்த துருவல் மீதம் இருந்தால் அதனை சுத்தம் செய்து விட வேண்டும்.அளவோடு வைப்பது நலம் .

4. மக்காசோளம் வாரத்தில் மூன்று நாட்கள்.

5. கீரை வகைகள் வாரத்தில் ஒரு நாள் குதிரை மசால் , முருங்கை கீரை, தண்டு கீரை, மனத்தக்காளி கீரை ,போன்றவை .

6. மல்லி தழை தினமும் கொடுக்கலாம்.

7. வாரத்தில் இரண்டு முறை பச்சை பயறு , கொண்டை கடலை (சுண்டல்), கோதுமை, போன்றவைகளை ஊற வைத்தும் முளைப்பு கட்டியும் கொடுக்கலாம்.

8. தினமும் காலை 11 மணிக்கு பறவைகளின் மேல் மெல்லிய துளை உடைய ஸ்ப்ரே பாட்டிலால் நீர் தெளிப்பது நலம். அல்லது கூண்டினுல் அவைகள் குளிப்பதற்கு வசதியாக ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த தண்ணீர் வைக்கலாம்.

9. தீவன பாத்திரம் தண்ணீர் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்வது மிக நல்லது.

10. பறவைகளின் கூண்டை வாரம் ஒரு முறை சுத்தம் செய்வது மிகவும் நல்லது மற்றும் பறவைகளின் சுகாதாரத்திற்கும் அவைகளின் ஆரோகியத்திற்க்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

11. பறவைகள் இருக்கும் இடத்தில் சிறு தொட்டிகளில் துளசி ,மூங்கில் போன்றவை வளர்ப்பது இயற்கை சூழ்நிலையை அளிக்கும் .

Exit mobile version