கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மோசடியைத் தடுப்பது எப்படி?

* பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை யார் கேட்டாலும் கொடுக்கக் கூடாது. வங்கி வாடிக்கையாளர் மையத்தில் இருந்து பேசுகிறோம் என்று யாராவது போனில் அழைத்தால் உஷாராக இருக்க வேண்டும்.

* டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி மாற்ற வேண்டும்.

* ஏ.டி.எம். மையத்தில் சென்று பணம் எடுக்கும் போது ஏ.டி.எம். எந்திரத்தில் வேறு ஏதும் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

* தங்களுடைய செல்போன் எண்களை வங்கியில் கொடுத்து, பண பரிமாற்றங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை பொதுமக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

* தேவையில்லாமல், சர்வதேச கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை அதிகம் வாங்கி வைத்துக்கொள்ளக் கூடாது.

* ஜவுளிக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளை கொடுக்கும்போது ஒருமுறைதான் தேய்க்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.

* நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் தங்களது கார்டுகளை கொடுக்கக் கூடாது.

* போலி கார்டு மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக தங்களது கார்டின் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline