வணக்கம் ,

விவசாய குடும்பத்தில் பிறந்து இப்பொழுதும்/எப்பொழுதும்  விவசாயத்தில் தீராத காதல் காரணமாக இந்த பக்கம் .

விவசாயம் பற்றிய தேடலில் நிறைய தெரிந்து கொண்டேன் .நான் தெரிந்து கொண்டவைகளையும் , புதியதாய் படிப்பதையும், தெரிந்து கொள்வதையும் , பலரது பயனுள்ள பதிவுகளையும்  இங்கே நான் ஒரு நூலகம் போல தொகுத்து வைத்துள்ளேன்.

எங்கு சென்றாலும் மனது விவசாயத்தை தேடும் .பார்க்கும் இடம் எல்லாம் , கண்ணில் படுவதை எல்லாம் விவசாயத்துடன் இணைத்து பார்க்கும் மனம்.

நிறைய கனவுகள் ,நிறைய நிறைய வழிமுறைகள் இப்படி செய்தால் என்ன, அப்படி செய்தால் என்ன என்று சிந்தை நிறைந்து இருக்கும் . சில வேலைகளில் மிகவும் கஷ்டப்பட்டு களத்தில் வேலைகள் செய்தே கற்று கொள்ள முடிந்தது .அங்கும் பல துரோகங்கள் , ஏமாற்றங்கள் என நிறைய சந்தித்தே வெளி வர முடிந்தது .

புத்தக அறிவும் தேவை .அனுபவ அறிவும் அதிகம் தேவை .இங்கு நான் அனுபவ அறிவு என்று சொல்லுவது களப்பணி.அனுபவ அறிவை புத்தக அறிவுடன் சேர்த்து எது சரி எது தவறு என்று செயல் முறையில் பார்த்து முடிவுகள் செய்து கொள்வதுண்டு. எல்லாம் எல்லா இடத்திற்கும் ஒத்து போவது இல்லை , இடத்திற்கும் தேவைக்கும் தகுந்தற்போல மாறுபடுகிறது .மாற்றங்கள் நிச்சயம் இருக்கும் .அதனை ஏற்றுக்கொள்ள  வேண்டும் .

சில காலமாக முதல் உலகபோருக்கு  முன்பு எப்படி விவசாய முறைகள்  இருந்தது என்ற தேடலில் உள்ளேன் .தகவல்கள் உங்களிடமோ அல்லது கிடைத்தை பகிரவும் .அப்பொழுது விவசாயம் என்ற பொதுவான பெயரே இருந்தது. இன்றுபோல்  விவசாயத்தில்  மிக அதிகமான வகைகள், வேறு வகைகளோ  இல்லை .

நன்றி
பண்ணையார்
தொடர்பு கொள்ள : pannaiyar@hotmail.com