உழவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாதுனு..

உழவன் கணக்குப் பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாதுனு.. இதன் விளக்கம் தெரியாமல் யாரும் விவசாயத்தை குறைவாக எடை போடவேண்டாம்

உழவன்: விவசாயி, உழவு தொழில் செய்பவன், உலகிற்கு உணவளிப்பவன் / உணவு உற்பத்தி செய்பவன் , விளைபொருளை விளைவிப்பவன் என பல பன்முகங்களை கொண்ட கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவன்.

கணக்குப் பார்த்தால் : தான் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு வியாபாரியாக மாறி கணக்கு பார்த்தல், அதாவது உற்பத்தி விலை + லாபம் % = விற்பனை விலை ( Cost price + Profit (%) = Sale Price) என்ற பொருளாதார தத்துவத்தின்படி தன் பொருளை நல்ல லாப விலைக்கு விற்றால்

உழக்கு கூட மிஞ்சாதுனு: அந்த விளை பொருளை வாங்குபவன் தனது வருமானம் போதாமல் தன் வீட்டில் இருக்கும் உலக்கை கூட விற்கும் நிலைக்கு தள்ளபட்டு விடுவான்.

எவ்வளவு பெருந்தன்மையனவன் உழவன் என்பதற்கு இதை விட வேறு அருமையான விளக்கம் இல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline