ஸ்படிகம் என்றால் என்ன?

spadigum

பல நுறு வருடங்களாக பூமிக்கு அடியில் தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள்.

ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும். ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான. சரியான அளவில் வெய்க்கும்.

2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.

நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு இணையாக. வேறு எதற்க்கும் இல்லை.

ஸ்படிக மாலை குறித்து கேட்கப்படும் கேள்விகள்.

1]ஸ்படிக மாலை அணிவதர்க்கு என்று ஏதேனும் அடிப்படை தகுதிகள் இருக்கிறதா?.
2] ஸ்படிக மாலை அணிவதற்க்கு . ஏதேனும் ஆச்சார. அனுஷ்டானங்களை கடைபிடிக்க வேண்டுமா?
3] ஸ்படிக மாலை அணிவோர்கள். அசைவம் சாப்பிட கூடாதா.
4] ஸ்படிக மாலை பெண்கள் அணியலாமா?
5] ஸ்படிக மாலையில் எவ்வளவு? விதமான தரங்கள் உள்ளது
6] ஸ்படிக மாலையின் தரத்தை எவ்வாறு கண்டறிவது.

ஏற்கனவே. நான் மேலே குறிப்பிட்டதை போல். அன்று. மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்க்காக. சித்த புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று. அவர்கள் இஷ்டத்திற்க்கு மனதில் தோன்றியவைகளை எழுதி வெய்த்து விட்டு சென்று விட்டார்கள்.

அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

தெய்வ பக்த்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வெய்த்து. உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை. கிடைக்கும் நேரத்திற்க்கு தகுந்தார் போல். ஜெபம் செய்யலாம்.

அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே. அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற ஒப்பன் ச்பேச்சில். உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மலையை வெய்த்து செய்யுங்கள்.

நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து.

இதை நீங்கள் சும்மா. முயற்ச்சி செய்து பாருங்க. உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மாலையோடு குளிப்பது நல்லது.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.