வெட்டிவேர்

வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும்.

vettiver-pannaiyar

நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.

வேர் கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது.

இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.

இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.

வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.

இது லெமன்கிரேஸ், பாம்ரோசா புல் போன்று வளரும்.

வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.
நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள்.

வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள்.

இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.

வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மருத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர்செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை.ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம்.
மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும் வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர்.
செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரை மட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். 12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம்.மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம்.
ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது.
பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.
வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.
அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது.
கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும்.
மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்துகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பிறகு 13ம் மாதத்தில் அறுவடைதான்.

தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் (அஞ்சல்), தாராபுரம்-638 657.

-எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், அக்ரி கிளினிக், 09360748542.

வெட்டிவேர் நாற்றுகள்

வெட்டிவேர் மகிமையை நாம் ஏற்கனவே படித்து உள்ளோம்.இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:

இது ஒரு லாபகரமானபயிர்.
இதற்கு அதிக ஆள் தேவையில்லை.
அதிக தண்ணீர் தேவையில்லை.
அதிக வெயில் தேவையில்லை.
அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது.
பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. வேண்டுவோர்

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630.அலைபேசி எண்: 04371244 408.

One Response

  1. Ravi 28/11/2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline