நாம் ஆசையாய் வளர்த்து வரும் செடி கொடிகளில் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எறும்புகள் தானாக வருவதில்லை, அந்த செடிகளில் அசுவினி என்ற பூச்சி இருக்கும், அவை செடியின் இலை, தண்டு பகுதிகளில் இருந்து சாறை உறிஞ்சி வெளியேற்றிக் கொண்டிருக்கும், அந்த நீரை குடிக்கவே எறும்புகள் படையெடுகின்றன. எறும்புகளை ஒழிக்கணும் என்பதைவிட அசுவினி பூச்சிகளை முதலில் அழிக்க வேண்டும்.
இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து
பூச்சிகளினால் பாதிக்கப் பட்ட செடிகளின் அளவை பொறுத்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் (கொஞ்சமாக) ஒரே அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
பூண்டை கெரசினில் 12 மணி நேரம் ஊற வைத்து பின் அரைப்பது சிறப்பு. இஞ்சி, மிளகாயை அரைத்து மூன்றையும் மெல்லிய துணியில் வைத்து சிறு மூட்டை மாதிரி கட்டி நீர் நிரப்பப்பட்ட வாளியில் மூழ்குமாறு வைத்துவிடவும். கலவையின் சாறு தண்ணீரில் இறங்கியதும் நன்கு கலக்கி உபயோகிக்கலாம். பூச்சி, எறும்பு தென்படும் செடிகளில் தெளிக்கவும். கரைசலுடன் காதி சோப் சிறிது கரைத்து சேர்த்து தெளித்தால் மருந்தின் வீரியம் செடியில் நீண்ட நேரம் இருக்கும்.
மூன்றும் காரத்தன்மை உள்ளது என்பதால் கையுறை அணிந்துகொள்வது நல்லது.