இந்தியாவில் நடந்த மிக முக்கியமான விவசாயம் சார்ந்த புரட்சிகள் :
1. பசுமை புரட்சி – விவசாயம் – திரு. எஸ்.சுவாமிநாதன் – 1966-1967
2. வெள்ளைப் புரட்சி – (அ) வெள்ளம் செயல்பாடு பால் / பால் பொருட்கள் – திரு. வர்கீஸ் குரியன் – 1970-1996
- வெளிநாட்டு அதிக பல கொடுக்கும் கலப்பின பசுக்கள் அறிமுகம்
உலகின் மிகப்பெரிய பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டமான வெள்ளைச் செயலாக்கத்தின் வடிவமைப்பாளராக குரியன் கருதப்படுகிறார். ஆனந்த் மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன் இந்தியாவின் வெண்புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
3. நீல புரட்சி – மீன் & நீர்மம் – திரு. அருண் கிருஷ்ணன் – 1973-2002
4. தங்க புரட்சி – பழங்கள், தேன், தோட்டக்கலை – திரு.நிர்பக் டூட்ஜ் – 1991-2003
5 . வெள்ளி புரட்சி – முட்டைகள் – திருமதி.இந்திரா காந்தி – 2000’s
6 . மஞ்சள் புரட்சி – எண்ணெய் விதைகள் – திரு.சாம் பிட்ரோடா – 1986-1990
7 . இளஞ்சிவப்பு புரட்சி – மருந்துகள், இறால்கள், வெங்காயம் – திரு. துர்காஷ் படேல் – 1970’s
8. பழுப்பு புரட்சி – தோல், கோகோ – திரு. ஹர்லால் சவுத்ரி
9 . சிவப்பு புரட்சி – இறைச்சி, தக்காளி – திரு. விஷால் திவாரி – 1980’s
10. தங்க இழை புரட்சி – சணல் – 1990’s
11. பசுமைமாறா புரட்சி – வேளாண் மொத்த உற்பத்தி – திரு.எம்.எஸ்.சுவாமிநாதன்- 2014-2022
12. கருப்பு புரட்சி – பெட்ரோலியம்
13. வெள்ளி – இழை புரட்சி – பருத்தி 2000’s
14. சுற்று(அ)வட்ட புரட்சி – உருளைக்கிழங்கு – 1965-2005
15. புரோட்டீன் புரட்சி – விவசாயம் (உயர் உற்பத்தி) திரு.நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது – 2014-2020
16. சாம்பல் புரட்சி – உரங்கள்