மனசு போல வாழ்க்கை

 

மனசு போல வாழ்க்கை

நாம் வளமுடன் வாழ என்ன தேவை ,  உணவு , உடை ,இருப்பிடம் இதனை சுற்றியே நமது தேவைகளும் உள்ளது. தனி ஒரு மனிதனின் தேவைகளும் இதனைத் தானே தேடுகிறது . இதில் வித்தியாசம்தான் எத்துனை . அளவிட முடியாதா என்று நினைக்கும் அளவுக்கு உள்ளது மனிதனின் ஆசைகள் .சரி, ஆசை இல்லாதவன் யாருமே இல்லை .அன்று புத்தன் சொல்லியது போல ” ஆசையே அழிவுக்கு காரணம் ” அரசனாக வாழ்ந்துபார்த்து  சொல்லிய வார்த்தைகள். நிச்சயம் இந்த உலகின் மிக கொடிய மிருகம் அழிக்க படவேண்டியது என்னமோ மனித விலங்கை தான் .

நானும் அந்த கொடிய விலங்கினத்தை சேர்த்தவன் என்பதில் பெருமை அடைகிறேன்.  நானும் அது போல ஒரு வாழ்கை வாழவேண்டும் என்று எண்ணியதுண்டு. நாமும் ஒரு அந்தமான வாழ்கை வாழ வேண்டுமே என்று யோசிக்கையில், தோன்றியதில் என்னமோ ஒன்றுமே இல்லை . வெறும் வெறுமையாக உணர முடிந்தது .அனைவரும் தேடும் சந்தோசம் நம்மிடம் மட்டுமே உள்ளது .

சில வருடங்களுக்கு முன்பு எல்லாம் வார இறுதி நாட்களில் கிடைக்கும்  நேரத்தில் விமான நிலையம் சென்று விடுவேன். அமைதியா உட்கார்ந்து கொண்டு மனிதர்களை பார்ப்பது உண்டு . ஒரு இரண்டு மணிநேரம் விமானம் புறப்பாடு பகுதியிலும் , இரண்டு மணி நேரம் விமானம் வருகை பகுதியிலும் பார்த்து கொண்டும் இருப்பேன் .யாரிடமும் பேசுவதும் இல்லை . இதில் நான் கற்று கொண்ட பாடங்கள் தான் எத்துனை எத்துனை .இன்று அதுபோல ஒரு வாய்ப்புகள் , பேருந்து பயன்களில் கிடைப்பது உண்டு .

நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்று தெரிந்து கொள்ள நினைத்தால்,நமது வாழ்வு மிகவும் பரபரப்பானதாக மாறி விடுகிறது. எத்துனை மக்கள் தாங்கள் விரும்பும் வேலைகளை செய்து கொண்டு உள்ளோம், என்று எண்ணி பார்த்தல் கிடையாது. ஒரு நோக்கம் பணம் , நமக்கு , வாரிசுகளுக்கு , பேரன்களுக்கு , கொள்ளு பேரன்களுக்கு , அடுத்த அடுத்த தலைமுறைக்கு எதையோ சேர்த்து விட்டு , நமது உழைப்பை நாம் சந்தோசமா இருகிறோம் என்று  நினைத்து கொடு உள்ளோம்.பல மனிதர்கள் நேரம் இல்லை என்று சொல்லுவது உண்டு. அப்படி சொல்லும் அனைவரும் தனது கைபேசியில் அதிகமான நேரத்தை செலவிடுவதை காணமுடிகிறது.

எப்படி எப்படியோ வாழும் இனத்தில் நான் இப்படி வாழ்ந்தால் என்ன என்று யோசித்ததின் விளைவே இந்த தொகுப்பு.நிச்சயம் தவறுகள் உண்டு.சக மனிதர்களால் ஏற்று கொள்ள முடியாதா பல விடயங்கள் இங்கு வரும் .யோசித்து பார்த்து இயல்புக்கு சாத்தியமுள்ளது  மட்டுமே பயன்படுத்துவது நலம் .

வாழ்க்கைக்கு என்ன தேவை ? ,  தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்கள் எவை? , என்ன பணம் செலவு செய்து புறத்தோற்றம்  பயன்பாட்டுக்கு பொருள் வாங்கிவைத்து உள்ளோம் ? அந்த பொருளை வாங்க நாம் என்ன வேலை செய்து பொருளை வாங்கினோம் ? எது தேவை , எப்பொழுது தேவை , எதற்கு தேவை ? அதிகம் பயன்படுத்தும் இடம் , இடத்தின் அளவு , அமைப்பு, அதில் இருக்கும் வசதிகள், வசதிககுள் செய்த செலவு . இப்படி யோசனைகள் செய்து கொண்டே சென்றால், ஒரு கேள்வி ஒருவேளை நான் கருமி ஆகிவிட்டேனோ? என்று . 🙂 .

ஆழ்ந்த யோசனைக்கு பின் நிச்சயம் நான் நிம்மதியான ,ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான எண்ணத்தில் தான் உள்ளேன் என்பதை தெரிந்து கொண்டேன்.தினசரி வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கும் .அதுவும் மிகுந்த பணக்காரன் போன்ற  தோரணை கொடுக்கும் வாழ்கை முறைகள். இதை தானே உலகம் தேடுகிறது.

என் தேவைகள் என்ன என்ன ?

  1. உணவு ,
  2. உடைகள் ,
  3. இருப்பிடம் ,
  4. போக்குவரத்து வசதி

இந்த தேவைகள் அனைவுக்கும் பொதுவானது. எனவே இதில் எது தேவை எது தேவை இல்லை என்று ஓர் திட்டம் போடுங்கள். தேவையில்லாத பொருள்கள் நிச்சயம் நிறைய வைத்து இருப்போம் .