ராகி வேர்க்கடலை அல்வா
கேழ்வரகு என்று அளிக்கப்பட்டு ராகி மிகுந்த சத்துக்கள் கொண்ட ஒரு சிறுதானிய உணவு பயிர் ஆகும் . அதே போல வேர்கடலையும் மிகுந்த சத்துக்கள் கொண்ட ஒரு எண்ணைவித்து பயிர் ஆகும் .இந்த இரண்டையும் கொண்டு எவ்வாறு நல்ல சுவையான அல்வா செயவைதபற்றியும் , அதன் பயன்களை அறிந்து கொள்வோம் .
தேவையானவை:
கேழ்வரகு மாவு, வேர்க்கடலை – தலா 100 கிராம், ஏலக்காய்த் தூள், – ஒரு சிட்டிகை, முந்திரி – 5, சர்க்கரை – கால் கிலோ, நெய் – அரை கப், வெள்ளைப் பூசணி – 100 கிராம், பால் – ஒரு கப்.
செய்முறை:
கேழ்வரகு மாவை, நன்றாக வாசம் வரும் வரை வறுக்கவும். பிறகு, ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து, வேக வைக்கவும். இதனுடன், சர்க்கரை சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் தோல் நீக்கிய வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.
பலன்கள்:
நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்துதர, உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.