முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒன்று. முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கால்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில்தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதில் கனமான வெள்ளைத் தண்டை நீக்கி சாப்பிடுவது நல்லது . முட்டைக் கோஸை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி பின் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். இதனை வேகவைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைவதால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் பாதிக்க ஆரம்பிக்கும். சிறுநீரகம், இதயம், இரத்தக் குழாய் போன்றவை அதிகம் பாதிக்கப்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலுகொடுக்க கோஸ் சிறந்த மருந்தாகும். வாரத்தில் இருமுறையாவது கோஸை உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்தம் சுத்தமடையும்.
முட்டைகோசுடன் சிறிது சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும். உடலில் இனம்புரியாத நோய்கள் ஏற்படுவதற்கு பித்த மாறுபாடே காரணம். உடலில் பித்த நீர் அதிகம் சுரந்து அவை பல இன்னல்களை உண்டாக்கும்.
முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் பித்தம் சீரான நிலையில் இருக்கும். சிலர் அதிக உடல் எடையால் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் முட்டைகோஸை சூப் செய்து அருந்திவந்தால் பருத்த உடல் இளைக்கும். உடலுக்கு பலம் தரும்.