முகப்பரு ஏற்பட மலச்சிக்கல் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு.
முகப்பரு வராமல் தடுக்க உணவில் அதிக கவனம் தேவை. எளிதில் ஜுரணமாகும் உணவையே உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். தலையில் பொடுகு இருந்தால் அதற்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீரால் அடிக்கடி முகத்தை கழுவுவது நல்லது.
முகப்பரு வந்தால் அதை கிள்ளி விடுவது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அப்படி கிள்ளினால் முகத்தில் வடு ஏற்பட வழியுண்டு
முகப்பருவுக்கு வெந்தயம் நல்ல மருந்து ஆகும். வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து பருக்கள் மீது தடவலாம். வேப்பிலை கொழுந்தை அரைத்தும் தேய்க்கலாம். கடலை மாவுடன் தயிரை கலந்து பருக்கள் மீது பூசினாலும் பலன் கிடைக்கும். பச்சை வெள்ளைப் பூண்டை பருக்கள் மீது தடவி வந்தாலும் பருக்கள் மறையும்.
சந்தனத்தை பன்னீரில் குழைத்து முகப்பருவில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி 3 மாதங்;கள் செய்தால் முகப்பரு எட்டிப் பார்க்காது என்பதுடன் கன்னங்கள் பளபளக்கும்