மஞ்சள் இயற்கை விவசாயம்

மஞ்சள் இயற்கை விவசாயம் செய்வது எப்படி

 

மஞ்சள் பயிர் செய்வது எப்படி?

அதற்கான விதைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

பயிர் செய்யும் நிலத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

அதைப் பக்குவப் படுத்துவது எப்படி?

பராமரிப்பது எப்படி?

பாதுகாப்பது எப்படி? என அடிப்படையிலிருந்து அறுவடை வரை இலகுவாக தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். இவற்றை திரட்டுவதற்கு சில நூல்களின் உதவிகளும் பல விவசாயிகளின் அனுபவங்களும் எங்களுக்கு உதவியது இனி அது உங்களுக்கும் உதவும் என்ற நோக்கத்தில் உங்களுக்காக இங்கு பதிவு செய்கிறோம்.

 

எப்படி மஞ்சள் விதைகளை தேர்வு செய்வது ? 

 

மஞ்சள் விதைகளைத் தேர்வு செய்வதற்கு முன்னர் நாம் பயிர் செய்யப்போகும் நிலத்தின் தன்மை மற்றும் சூழலின்

 தட்பவெப்ப நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற மஞ்சள் விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 முடிந்த அளவு இயற்கை முறையில் தேர்வு செய்த ஆரோக்கியமான விதைகளை பயன்படுத்துவது நல்லது.

பொதுவாக பயிர் செய்கைக்கு விரலி மஞ்சள் அல்லது கிழங்கு மஞ்சளை விதையாக பயன்படுத்தலாம். சராசரியாக ஒரு ஏக்கர் பயிர் செய்கைக்கு கிலோ 600 முதல் 800 வரை மஞ்சள் தேவைப்படும்.

 

விதை சுத்திகரிப்பு ( விதை நேர்த்தி ). 

மஞ்சள் இயற்கை விவசாயம்

ஒவ்வொரு முறையும் மஞ்சளை அறுவடை செய்தபின்பு கிடைக்கும் விதைகளை செதில் பூச்சி, பூஞ்சனம் தாக்காதவாறு நேர்த்தியான முறையில் சுத்திகரிக்க வேண்டும். இதனால் விதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

ஆரோக்கியமான விதைகள் மூலம் மகத்தான விளைச்சல் கிடைக்கும்.

 

அறுவடை செய்தவுடன் விதை நேர்த்தி

(600-800 கிலோ விதை மஞ்சளுக்கு)ஆவூட்டம் (பஞ்சகவ்யம்) – 2 – 5 லிட்டர் (தயாரிப்புமுறை குறிக்கப்பட்டுள்ளது)சூடோமோனஸ்– 1- 2 கிலோதண்ணீர் – தேவையான அளவுஇவற்றை நன்கு கலக்கி விதை மஞ்சள் நன்கு மூழ்குமாறு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் விதை நேர்த்தி செய்த மஞ்சளை நிழலில் உலர வைத்து பின்னர் பாதுகாப்பான இடத்தில் வெப்பம் மற்றும் தண்ணீர் புகா வண்ணம் சேமிக்க வேண்டும். மஞ்சள் நடவு செய்வதற்கு முன்பாக மற்றுமொருமுறை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 

நடவு முன் விதை நேர்த்தி

ஆவூட்டம் – 2 லிட்டர்சூடோமோனஸ் – 1 கிலோதண்ணீர் – 100 லிட்டர்இவற்றை நன்கு கலந்து விதை மஞ்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நடவு செய்யலாம். இவ்வாறு செய்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். செதில் பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் வெகுவாகக் கட்டுப்படும்.

மஞ்சள் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலமும் அதன் பராமரிப்பும். 

மஞ்சள் இயற்கை விவசாயம்

 

ஏற்கனவே மஞ்சள் பயிர் செய்த நிலத்தில் மீண்டும் மஞ்சள் விதைகளை பயிரிடக்கூடாது. அவ்வாறு பயிரிட்டால் விதைகள் நூற்புழு தாக்கத்திற்கு உள்ளாகி பயிர்களின் வளர்ச்சி தடைபடுவதுடன் விளைச்சலும் பாழாகும்.

அதேபோல் நூற்புழு தாக்கத்தை அதிகரிக்கும் வாழை, மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் கனகாம்பரம் ஆகிய விதைகளை பயிரிட்ட நிலத்திலும் மஞ்சளை பயிரிடக்கூடாது. மஞ்சள் பயிர் செய்கைக்கு பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். எனவே மஞ்சள் பயிரிட்ட நிலத்தில் ஒரு வருடத்திற்கு மாற்றுப் பயிர் செய்கை செய்த பின்பு மஞ்சளை பயிரிடலாம். மஞ்சள் பயிரிடுவதற்கு முன்னர் பயிரிடும் நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை உழ வேண்டும். கடைசி முறை உழும்போது ஒரு ஏக்கருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் அல்லது 2 டன் மண் புழு உரமும் நிலத்தில் சாம்பல் சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 500 கிலோ வீதம் நெல் உமி சாம்பல் இட வேண்டும்.

இயற்கை முறை பயிர் பராமரிப்பு செய்வது எப்படி?

சாதாரணமாக நடவு செய்து ஒரு வாரத்தில் அதை சுற்றி களைகள் முளைக்கத் தொடங்கிவிடும் இவற்றை அகற்றிவிட சுரண்டுகளை செய்ய வேண்டும். 30 நாட்கள் கழித்து களை இருந்தால் மீண்டும் அகற்ற வேண்டும். கொல்லி போன்ற எந்தக் வேதிக் கொல்லிகளையும் பயன்படுத்தக் கூடாது. ( இது உயிர்ச்சூழலை பாதிப்பதுடன் நிலத்தையும் மலடாகிவிடும். ). பின்னர் மஞ்சள் செடி, பாரின் நடுவில் வருமாறு மண் அணைக்க வேண்டும். முன்னர் கூறிய பலவகைப் பயிர்களை ஏக்கருக்கு 10-12 கிலோ வீதம் பாரின் நடுவே தூவி உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு செய்த 50 நாட்கள் கழித்து பாரில் தூவிவிட்ட பலவகைப் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும். இவற்றை எல்லாம் பிடுங்கி ஒருபார்விட்டு ஒருபாரில் பரப்பிவிட வேண்டும். இதற்கு மூடாக்கு என்று பெயர். பரப்பிய பாரில் நீர் பாயாதவாறு மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால் பாதியளவு பாசனம் போதுமானதாகிறது பயிர்களைப் பரப்பி வைப்பதால் நீராவிப் போக்கு கட்டுப்படுத்தப் படுகிறது. மண்புழுப் பெருக்கம் அதிகமாகி விரலி ஓட்டம் அதிகரிக்கும். நிலம் செழிப்பாக மாறும்.

நடவிற்கு 60 நாள் கழித்து தோட்டத்தில் காணப்படும் புல், பூண்டு மற்றும் சுற்றியிருக்கும் செடி,கொடிகளை சேகரித்து பலவகைப் பயிர்கள் பரப்பிய பாரில் போட வேண்டும். அதை அறுவடை வரையில் தொடர்ந்து செய்துவரலாம். பயிர்வளர்ச்சி குன்றி இருந்தால் அல்லது ஊக்கம் இன்றி இருந்தால் இதில் சொல்லப்பட்ட வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தலாம்.அமுதக் கரைசல் (உடனடி வளர்ச்சி ஊக்கி)இதை நடவு செய்த 45 ஆம் நாளிலிருந்து பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் – 1கிலாமாட்டுச் சிறுநீர் – 1 லிட்டர்பனைவெல்லம் – 250 கிராம்நீர் – 10 லிட்டர்இவற்றை நன்கு கலக்கி 24 மணி நேரம் ஊறவைத்து இதிலிருந்து 1 லிட்டர் கரைசலை எடுத்து 10 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பான் மூலம் மஞ்சள் இலைகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். நடவு செய்த 45 நாளில் 50 லிட்டர் கரைசல் போதுமானதாக இருக்கும்.

ஆவூட்டம் (  use indian cow breeds )

உடனடி வளர்ச்சி ஊக்கியில் அவ்வளவு பயன் கிடைக்காவிட்டால் பின்வரும் ஆவூட்டம் என்ற கலவையைப் பயன்படுத்தலாம்.மாட்டுச் சாணம் – 5 கிலோமாட்டுச் சிறுநீர் – 5 லிட்டர்(இவற்றை மண்பாளை அல்லது வாளியில் 15 நாட்கள் ஊற வைக்க வேண்டும். இத்துடன் தனியாக 2 லிட்டர் தயிரை 15 நாள் புளிக்கவிட வேண்டும். 16 ஆம் நாளில் மேலே கூறிய இரண்டு கரைசலையும் சேர்த்து பின்வரும் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.)* பால் – 2 லிட்டர்நெய் – 1/2 முதல் 1 லிட்டர்பனைவெல்லம் – 1 கிலோ (அல்லது நாட்டுச் சர்க்கரை)இளநீர் – 3-4 எண்ணம்இவற்றை எல்லாம் நன்கு கலந்து 1 வாரம் மண்பாணையில் ஊற வைக்க வேண்டும்.

https://www.pannaiyar.com/wp-content/uploads/2019/03/ஜீவர்மிர்தம்-கரைசல்-பண்ணையார்.jpg

தினமும் மாலை 3 நிமிடங்கள் வரை கலக்கிவிட்டு வர வேண்டும். இதுவே ஆவூட்டக் கரைசல் இதை ஆறு மாதம்வரைப் பயன்படுத்தலாம். மஞ்சள் பயிருக்கு 1 லிட்டருடன் 10 லிட்டர் நீர் சேர்த்து இலைகளில் நன்கு படும்படியாக தெளிப்பான் மூலம் அடிக்க வேண்டும்.மஞ்சளில் சாம்பல் சத்து குறைவாக இருந்தால் முதிர்ந்த இலைகளின் ஓரம் கருகத் தொடங்கி இருக்கும். விரலி ஓட்டத்திற்கும் நல்ல திரட்சியான மஞ்சளுக்கும் சாம்பல் சத்து மிக அவசியம். இதைச் சரிசெய்ய தோட்டத்தின் வெளியில் உள்ள களைகளைச் சேகரித்து வந்து உலர வைத்து தனியான இடத்தில் தீயிட்டுச் சாம்பல் செய்ய வேண்டும். இந்தச் சாம்பலை ஏக்கருக்கு 50-100 கிலா என்ற கணக்கில் மண் அணைக்கும்போது போட வேண்டும். அல்லது உமி சாம்பல் 500 கிலோ பயன்படுத்தலாம்வேர்மூலம் பரவும் நோய்களான கிழங்கு அழுகல்நோயைக் கட்டுப்படுத்தவும் வேரைத் தாக்கும் நூற்புழுவைக் கட்டுப்படுத்தவும் கீழ்க்கண்ட கரைசலைப் பயன்படத்தலாம்.

 

சாணஎரிவாயுக் கிடங்கில் இருந்து கிடைத்த சாணக்கழிவு – 50 லிட்டர்ஆவூட்டம் – 5-10 லிட்டர்சூடோமோனஸ் புளோரசன்ஸ்டிவிரிடி 500 கிராம்ர்பைசிலோமைசிஸ்நீர் – 100-200 லிட்டஇவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். முதல் 4 மாதங்களுக்குள் 2 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.

 

இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.இவற்றை நன்கு கலக்கி ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். ஊறிய கரைசலை நீர் பாய்ச்சும்போது எல்லாச் செடிகளுக்கும் பரவுமாறு ஊற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஊற்றி வர வேண்டும். முதல் 4 மாதங்களுகுள் 3 முதல் 4 முறை பயன்படுத்தலாம்.இலைப்பேன்கள் தாக்கிய இலைகள் ஓரத்தில் சுருண்டு இருக்கும். இலையின் அடியில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும். இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த மூலிகைச் சாறு கொண்டு தெளிக்க வேண்டும்.

 

மூலிகைப் பூச்சி விரட்டி

விவசாயத்தைப் பொருத்தமட்டில் பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது, அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரினங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும்.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் – ஆடுதொடா, நொச்சிபோன்றவை.ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் – வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் – காட்டாமணக்கு, போன்றவை.கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் – வேப்பங்கொட்டை, எட்டிக் கொட்டைஇந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

 

jinger-garlic-soap-chilli-pannaiyar_com

இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள், பூச்சிகள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுவதால் பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தவிர்க்கப்படுகிறது.

 

 

பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான பொருட்களின் அளவு.

அ) சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோஆ) 1. சீதா இலை- 3-5 கிலோ, 2. காகிதப்பூ இலை-3-5 கிலோ, 3. உண்ணிச் செடியிலை- 3-5 கிலோ, 4. பப்பாளி இலை 3-5 கிலோமேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். அதாவது 4 வகைத் தழைகள் ஒவ்வொன்றிலும் 2 கிலோ கணக்கில் 8 கிலோ அளவில் எடுத்துக் கொள்ளவேண்டு. இவற்றுடன் மேலே சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை 100-500 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம்.

 

ஊறல் முறை.

இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து. இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முத 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். வடிகட்டி கரைசலில் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊறல் போடவும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இந்தக் கரைசலை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.

 

வேகல் முறை

இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 15 லிட்டர் நீரை ஊற்றி 2 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை வடித்து ஆறிய பின்னர் ஒரு படி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் மொத்த வடிகரைசலுடன் 100 லிட்டர் நீர் சேர்க்கலாம். கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.இலைப்புள்ளி நோய் பாதித்த இலைகளின் மேற்புறம் நீண்ட கண்வடிவ புள்ளிகள் தென்படும். பின்னர் ஒன்று சேர்ந்து பெரிதாகி இலைகள் மஞ்சள் நிறமடைந்து கருகிவிடும். இதற்கு சோற்றுக் கற்றாழை 3 கிலோ, உண்ணிச் செடி இலைகள் அல்லது சீதாப்பழ இலை அல்லது பப்பாளி இலை 3 கிலோ எடுத்து இவ்விரண்டு இலைகளையும் 15 லிட்டர் நீரில் வேகவிட வேண்டும். 10 விட்டர் அளவிற்கு சுண்டிய பிறகு 1 கிலோ மஞ்சள் தூள் கலந்து ஒருநாள் ஊறவிட வேண்டும். ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் கலந்து இலைப்புள்ளி தென்படும் இலைகளின் மேல் படும்படி தெளிக்க வேண்டும். இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

 

அறுவடை

பயிர் செய்து 7 முதல் 9 மாதம் கழித்து மஞ்சள் அறுவடை செய்யலாம். பச்சை வண்ணம் மாறி இலை மஞ்சள் வண்ணமாகி வாடத் தொடங்கும். அச்சமயம் தாள்களை அறுக்கத் தொடங்கலாம். இதன் பின்னர் ஒரு மாதம் கழித்து மண்வெட்டி கொண்டு கிழங்கு மற்றும் விரலியைச் சேதப்படுத்தாமல் அறுவடை செய்ய வேண்டும்.

மஞ்சள் இயற்கை விவசாயம்

மஞ்சள் தூள் meaning in english

மஞ்சளில் இருக்கும்  Curcumin என்ற அளவை கொண்டு மஞ்சளின் தரம் பிரிக்க படுகிறது . மேலும் இதனை நாம் சமையலில் turmeric powder ,turmeric pasteபயன்படுத்துகிறோம் .இதனை turmeric powder என்று english ல் அழைக்கபடுகிறது.

2 Comments

  1. திருப்பதி 13/06/2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline