பொது அறிவு கேள்விகள் – நம்மைப் போல் விலங்குகளுக்கும் வியர்வை வருமா ?
நம்மைப் போல் விலங்குகளுக்கும் வியா்ப்பது உண்டு. பாலுட்டி வகை உயிரினங்களில் பெரும்பாலான உயிரிகளில் வியா்வைச் சுரப்பிகள் உண்டு. இதனால் வளா்ச்சிதை மாற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் உடல் வெப்ப நிலையை மாறாமல் செய்ய அவசியமாகின்றது.
மனிதனுக்கு உதடுகளைத் தவிர எல்லா இடங்களிலும் வியா்வைச் சுரப்பிகள் உண்டு. உள்ளங்கை, உள்ளங்கால், அக்குள் பகுதி ஆகிய இடங்களில் மிக அதிகமான சுரப்பிகள் உள்ளன.
பூனை, எலி, சுண்டெலிகளுக்கு பாதத்தில் அதிகமான சுரப்பிகள் உள்ளன. முயலுக்கு உதட்டைச் சுற்றி வியா்ப்பது உண்டு. வெளவாலுக்கு தலையின் பக்கவாட்டிலும், அசைபோடும் விலங்குகளுக்கு ( ஆடு, மாடு முதலியன ) விரல் இடுக்கிலும், நீர் யானைக்கு புறச் செவிமடல் பகுதிகளிலும் அதிகமான வியா்வைச் சுரப்பிகள் உள்ளன.
நீர்வாழ் பாலூட்டிகளான திமிங்கலம். டால்பின் ஆகிய வற்றுக்கு வியா்வைச் சுரப்பிகள் இல்லை !