புரதம் பற்றி
1) புரதத்தில் இரு வகை உண்டு. முதல் தர புரதம் (9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் நிரம்பியவை), இரண்டாம் தர புரதம் (9 அமினோ அமிலங்களும் முழுமையாக இல்லாதவை)
அசைவ உணவில் இருப்பது முழுக்க 9 அமினோ அமிலமும் நிரம்பிய புரதம்
தாவர உணவுகளில் இருப்பது 9 அமினோ அமிலமும் இல்லாத இரன்டாம் தர புரதம்
இப்போது ஒரு சின்ன கதையை பார்க்கலாம்
பந்தியில் ராமு, சோமு இருவரும் உணவருந்தினார்கள். ராமுக்கு பறிமாறியவர் ஐந்து இட்டிலியை இலையில் போட்டுவிட்டு, ஒரே ஸ்பூன் சட்டினியை இலையில் வைத்தார்.
சோமுவுக்கு பரிமாறியவர் எட்டு இட்டிலியை இலையில் வைத்து உடன் சாம்பார், தேங்காய் சட்டினி, கார சட்டினி, நல்லெண்ணெய்/பொடி எல்லாம் போட்டு விருந்துபசாரம் செய்து அசத்தினார்.
அதனால் எட்டு இட்டிலியை இலையில் இட்டும் சோமு எட்டு இட்டிலிகளையும் முழுமையாக உண்டு, இலையை துடைத்து எடுத்தது போல சுத்தமாக குப்பைகூடையில் போட்டான்
ஐந்து இட்டிலி மட்டுமே இலையில் போட்டும், பசி அதிகமாக இருந்தும் சட்டினி இன்றி இட்டிலியை உண்ணமுடியாமல் இரண்டு இட்டிலியை மட்டுமே உண்ட ராமுவின் இலையில் மூன்று இட்டிலிகள் மீதம் இருந்தது.
புரத விசயத்தில் நிகழ்வதும் இதுவே
இரண்டாம் தர புரதத்தில் 9 வகை அமினோ அமிலமும் இல்லாததால் அப்புரதத்தின் பெரும்பகுதி வீணடிக்கபட்டு யுரிவாகாக மாற்றபட்டு கழிவாக கிட்னியால் வெளியேற்றபடுகிறது. இதனால் உடலுக்கு போதுமான புரதம் கிடைக்காமலும் நம் கிட்னியில் யுரியா அதிகம் தேங்கி யூரிக் அமிலம், கவுட், கிட்னிக்கு கூடுதல் வேலை ஆகிய சிக்கல்கள் நேர்கின்றன.
9 அமினோ அமிலமும் முழுமையாக இருக்கும் முதல் தர மாமிச/பால்/முட்டை புரதம் முழுமையாக நம் உடலால் கட்டுமான பணிகளுக்கு பயன்பட்டு கழிவாக வெளியேறுவது மிக குறைந்த அளவிலேயே நிகழ்கிறது
மற்றபடி
நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பவர் 100- 120 கிராம் அளவு புரதம் மேக்ஸிமம் அளவில் எடுக்கலாம். அதற்கு மேல் போனாலும் அஞ்சவேண்டியதில்லை. ஆனால் நாம் எடுக்கவேன்டிய முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது
400 கிராம் சிக்கன் பிரெஸ்டில் 125 கிராம் புரதம்…சிக்கன் காலை தோலுடன் எடுக்கையில் புரத அளவுகள் குறைவு.
காலை பட்டர் டீ- 8 கிராம் புரதம்
மதியம் 3 முட்டை- 18 கிராம் புரதம்
மாலை: 300 கிராம் சிக்கன் கால் தோலுடன் 75 கிராம் புரதம். மொத்தம் 100. கலோரி போதவில்லை எனில் கூட பட்டர் நிறைய சேர்த்து எடுக்கலாம். காய்கறிகளும் எடுக்கலாம்
இதே மட்டன், பீஃப், போர்க் என்றால் கொழுப்பின் சதவிகிதம் மிக அதிகம். புரதம் குறைவு. அதனால் குழுவில் மட்டன் எடுப்பவர்கள் ஆட்டுகொழுப்பை மட்டும் தனியாக கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்
நன்றி : எல்லா புகழும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே