என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்கள் :

விவசாயம் பற்றிய ( புத்தக) அறிவை மேலும் வளர்க்க நான் படித்த மற்றும் தேடிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்

*  கிழ்க்கண்ட புத்தகங்கள் தேவைக்கு , இங்கு வாங்கி கொள்ளவும் 

படித்து முடித்தவை

ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபுஃபுகோகா  – 

“ஜப்பான் நாட்டில் பிறந்த ஒரு மகான்.சொந்த அனுபவங்களும் அவரின் பார்வையும் .படித்த பின்பு சொல்ல முடியாது மன ஓட்டங்கள் … பல முறை படித்தாலும் அலுக்காத ஒரு புத்தகம் .”

Buy 

ஜீரோ பட்ஜெட்…பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி – தூரன் நம்பி

“பல வகையான வெளி நாட்டு புத்தகங்களை படித்தேன் .Bill mollison  புத்தகம் படித்த பின்பு மிகவும் ஏங்கினேன் ஏன் இது போல புத்தகம் எல்லாம் தமிழ் இல்லை என்று அப்பொழுது இந்த புத்தகம் பற்றி அறிந்துபடித்தேன் .அனைவருக்கும் தேவையான ஒன்று “

நிலத்தடி நீர் வளமும் நீர் மேலாண்மையும்

“நில அமைப்பு ,நிலத்தடி நீர் வளம், நிலத்தடி நீர் மேலாண்மை , நீரின் வேதியல் பண்புகள்,மழை நீர் அறுவடை மற்றும் கட்டமைப்புகள் ,மழை சேமிப்பில் மக்களின் பங்கு பற்றிய விரிவான விளக்கங்களுடன்”

மண்புழு மன்னாரு!

“நிறைய விவசாயம் பற்றிய தொகுப்பு “

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்

“நீர் சேமிப்பு , தடுபணைகள் , வெட்டிவேர் தடுப்பு அணைகள் ,பண்ணை குட்டைகள் ,கசிவு நீர் குட்டைகள் ,சொட்டுநீர் பாசன முறைகள் பற்றிய விரிவான விளக்கங்கள் “

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி

“கடன் உதவி,அரசாங்க உதவிகள் , ஏற்றுமதி வாய்ப்புகள் . இது ஒரு அருமையான வழிகாட்டி “

வாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு

“வாத்துகளின் வகைகள் மற்றும் வளர்ப்பு முறை .அருமையான தொகுப்பு “

வாழ்க மரம் …வளர்க பணம் …

மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்!

“மரங்களின் வகைகள் ,வளர்க்கும் முறைகள்,சந்தை படுத்துதல் ,மேலும் பல பல பயனுள்ள தொகுப்பு “

இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி

“மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பது மற்றும் பராமரிப்பு முறைகள்.ஆசிரியரின் சொந்த அனுபவங்களை பகிர்ந்து அளித்துள்ளார் .மேலும் மண் புழு வளர்ப்பு ,மாடி தோட்டத்தின் தேவைகள் பற்றிய விளக்கங்கள் “

சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனப் பொறியியல்

“சொட்டுநீர் பாசன கருவிகள் ,சொட்டுநீர் பசன வடிவமைப்பு ,பராமரிப்பும் இயக்கமும்,தெளிப்பு நீர் பாசனம் மற்றும் நூன்னீர் உர பாசன முறைகள் பற்றிய விளக்கங்கள் “

நீங்களும் மீன் வளர்க்கலாம்

“மீன் வகைகள் மற்றும் வளர்க்கும் முறை .வகைகள் மற்றும் பயன்கள் .- Aquaculture “

Local Cow – One Kalpavriksha Krishi Sanskruti -தமிழ் வழி

“நமது நாட்டில் நாட்டு மாடுகளின் பங்கையும் , இப்பொழுது நாம் மறந்த மாட்டின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமாக எழுத பட்டுள்ளது . இதை படித்தால் நமது வருங்கால அவல நிலைகளை பற்றி தெளிவான ஒரு அர்த்தம் கிடைக்கும் மேலும் நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் , பன்னாட்டு நிறுவனகள் பற்றிய புரிதலும் கிடைக்கும் “.

How to practice Zero Budget Natural Farming -தமிழ் வழி

“அனைத்து விவசாய பெருமக்களும் படிக்க வேண்டிய புத்தகம் .இந்த புத்தகம் படிக்கும் ஒரு ஒரு மனிதனும் விவசாயத்தின் முக்கியத்துவமும் புரிந்து கொண்டு பயனடைய முடியம் .மனதில் மிக பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு புத்தகம்.”

          The Philosophy of Spiritual Farming (Part 1) -தமிழ் வழி
         The Principles of Spiritual Farming (Part 2) -தமிழ் வழி
         The Symbiosis of Spiritual Farming (Part 2 continuation) -தமிழ் வழி
          The Techniques of Spiritual Farming (Part 3) -தமிழ் வழி

“அருமையான விளக்கங்களும் செய் முறை பயிற்சியும் கொண்ட புத்தகம் .மிகவும் பெரிய விஷயங்கள் எளிமையான முறையில் விளக்கி சொல்ல பட்டுள்ளது .இதை படிக்காத யாரும் இயற்கை விவசாயம் பற்றிய தெளிவான கண்ணோட்டம் கிடைப்பது சிறிது கடினமே .”

அலங்காரக் கோழி வளர்ப்பு
அருமையான வழிகாட்டி. நோய் தடுப்பு முறைகள் , வளர்க்கும்முறைகள் . கோழி வகைகள் அதன்படங்களுடன் விளக்கம் என முகவும் பயனுள்ள புத்தகம்.

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

நலிந்து வரும் விவசாயத் தொழிலால் அன்றாடத் தேவைகளையே சமாளிக்க விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், சுயதொழில் மூலம் வருமானம் பெறுவதற்கான வழிகளைத் தெரிவிக்கிறது இந்த நூல். வாழ வழி தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதைத் தவிர்க்க, சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில், குறைந்த இட வசதியில், ஓய்வு நேரத்தை மட்டும் செலவழித்து தேனீ, காளான், காடை, வான்கோழி, புறா, வாத்து ஆகியவற்றை வளர்த்து கூடுதல் வருமானம் பெறலாம் என்கிறார் நூல் ஆசிரியர். மேலும், கிராமப் புறங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் இருந்து “பனீர்’ தயாரித்து விவசாயிகள் செல்வந்தராகலாம் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் தெரிவித்திருப்பது சிறப்பு. சுய தொழில் செய்து வருமானம் ஈட்டியவர்களின் அனுபவத்துடன் நூலைப் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு. விவசாயிகளுக்கு மட்டுமன்றி,  வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம்(ஒரு மரபியல் ஆய்வு)

பண்டைய இந்திய பாரம்பரியம் கால் நடைகளை, குறிப்பாக பசுக்களையும், காளைகளையும், மையப்படுத்தியே சுட்டிக்காட்டப்படுகிறது .இந்தியாவின் பாரம்பரிய சொத்துக்களான நாட்டு பசுக்கள் இப்போது எங்கே உள்ளன, எப்படி அடையாளம் காண்பது, யார் கொள்ளை அடித்தனர் .பாலுக்கென்றே வளர்க்கப்பட்ட நெல்லூர், தார்பார்க்கர், காங்கேயம், காங்கிரஜ் …என நம் பாரம்பரிய இனங்கள் அருகிப்போய் ஜெர்சியும், பிரீஷியனும் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகளால் புகுத்தப்பட்டன. தினமும் “வாளி நிறைய பால் கறக்கலாம்” என்று ஆசைவார்த்தை காட்டி மோசம் செய்த சீமை ரகங்களின் உடம்பெல்லாம் வியாதி. பண்டுகம் பார்த்தே நொந்து போனான் விவசாயி. சீமைப்புல் ,கியூபா புல், நேப்பியர் புல், யூரியா கலந்த வைக்கோல் என செயற்கையாக தருவிக்கப்பட்ட உணவே அளிக்க வேண்டும். இதில் நகைச்சுவை என்னவென்றால், இப்புற்களின் விதை கிலோ 60 ரூபாய், விதை நெல்லின் விலையோ வெறும் 6ரூபாய்! நஞ்சையே உணவாக உட்கொள்ளும் இவைகளின் பாலும் நஞ்சாக இருப்பது இயல்பு தானே. வெள்ளை புரட்சியின் கறுப்பு சுவடுகள் இங்கிருந்து தான் துவங்கின. சீமை மாடுகள் குறைந்த காலத்திற்கு அதிக பாலை தரலாம். ஆனால் நம் நாட்டு ரக மாடுகளைப் போல் சக்தியும் திறனும் படைத்தவை அல்ல அவை. காங்கேயம் மற்றும் ஹல்லிகர் காளைகளின் சக்தி (BULL POWER) அரேபிய குதிரைகளின் குதிரை சக்திக்கு (HORSE POWER) நிகரானது என்ற மேலை நாட்டு அறிஞர் குறிப்பை நான் தஞ்சை சரஸ்வதி மகாலில் கண்டேன். உழவு மாடுகளின் பராமரிப்பு செலவிற்கும் பால் தரும் நாட்டு ரக வளர்ப்பிற்கும் அரசு மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். மானியம் வழங்குவதில் இவ்வகைகளுக்கு முன்னுரிமை வழங்குதல் மிக அவசியம். “அப்போது தான் நம் நாட்டு வளர்ப்பு ரகங்கள் கீழ்மை அடையாது”.

மானாவாரியிலும் மகத்தான லாபம்

 நாம் இப்பொழுது கடைப்பிடிக்கவேண்டிய அவசியமான ஒன்று சிறு தனிய பயிர் அவசியம் பற்றிய விரிவான ஒன்று. ஒரு மோசமான நிலையில் இருந்த ஒரு கிராமத்தை வளமானதாக மாற்றிட்ட வழிகாட்டி .பாரம்பரிய முறையில் விதை சேமிப்பு, கூட்டுறவு, விதை பரிமாற்றம் என பல விடயங்கள் கொண்டது .

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!

எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் இல்லாமலே பாகற்காய், நம்பிக்கை தரும் நாட்டுக் கத்திரி, பிரமிக்க வைக்கும் பீர்க்கன்காய், பளபளக்கும் பாலியஸ்டர் மிளகாய், வெற்றிக்கு வழிகாட்டும் வெள்ளரி என பலவிதமான காய்கறி சாகுபடிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல். கூடவே, சாகுபடியை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், உரிய உரத் தயாரிப்புகளையும் தனியே பெட்டிச் செய்திகளாக இணைத்து, எல்லோருக்கும் பயனளிக்கும் ஏற்றமிகு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன.நெல்லி விவசாயத்துக்கான மேம்பாட்டு யோசனைகள், முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள், தென்னைக்கு இடையில் அரசாணி, வறண்ட நிலத்திலும் வளம் சேர்க்கும் சீத்தா என வித்தியாசமான கட்டுரைகளுக்கும் இந்த நூலில் குறைவு இல்லை. காய்கறி சாகுபடியில் உங்களை வெற்றிகரமான விவசாயியாக இந்த நூல் நிச்சயம் மாற்றிக்காட்டும்

வேளாண் காடுகள்

அருமையான படைப்பு .அனைத்து மரங்களின் பெயர் , வளரும் மண் , வளர்க்கும் முறை , பயன் பாடு , மரங்களின் நோய்கள் , மரத்தின் தாயகம் என நிறைய விளக்கங்கள் .

மொஸாட்

இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பின் வரலாறு .

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்

விவசாயிகளின் கேள்விக்கு வேளாண்மை அதிகாரிகளின் விளக்கங்கள் .அருமை என்னுடைய நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது இந்த புத்தகத்தின் வாயிலாக .

மலைக்க வைக்கும் மலைவேம்பு

          செடிகளின் செயலியல் பண்புகள்

          வெள்ளாடு வளர்ப்பு

          ஆடு-மாடு வளர்ப்பு

          கொட்டில் முறை வெள்ளாடு வளர்ப்பு

          போக முனிவர் சரக்கு வைப்பு – 800

          வீட்டில் காய்கறித் தோட்டம்

          இலாபகரமான பால்பண்ணைக்கு – இஸ்ரேல் காட்டும் வழி

          தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள்

           தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்

         விவாசயத்தில் பூச்சிகளின் புரட்சி
         
         உயிருள்ள இயற்கை உணவுகள்
              
         உழவுக்கும் உண்டு வரலாறு
         
         உயிருள்ள இயற்கை உணவுகள்
         
         எந்நாடுடைய இயற்கையே போற்றி!
         
         கால்நடை மருத்துவம் மூலிகை தமிழ் மருத்துவமும், ஓமியோபதி மருத்துவமும் பாகம்-1

          உழவுக்கும் உண்டு வரலாறு

        எந்நாடுடைய இயற்கையே போற்றி!

                  போகமுனிவர் பஞ்ச பட்சி சாஸ்திரம் ( உரையுடன் ) —உரையுடம்                இருந்தாலும் சரியானமுறையில்புரிந்துகொள்ள     இயலவில்லைமுயன்றுகொண்டுஇருக்கிறேன் .

                 போக முனிவர் சரக்கு வைப்பு – 800  – பாடல்களாகா உள்ளது  –சரியானமுறையில்புரிந்துகொள்ளஇயலவில்லைமுயன்றுகொண்டுஇருக்கிறேன் .

படிக்க காத்திருக்கும் இந்த மாதத்தின் புது வரவுகள் :

  தாய் மண்

மதிப்புக் கூட்டும் மந்திரம்

.வறட்சியிலும் வளமை

நாட்டுப்புற வேளாண்மை

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்

மழைக்காலமும் குயிலோசையும்

வயலும் வாழ்வும்

கிராம வைத்தியர்களுக்கான பயிற்சிக் கையேடு

நலவாழ்வுக்கான மூலிகைகள்

நலம் தரும் தாவரங்கள்

பறவைகள்: அறிமுகக் கையேடு

இயற்கைக்கு திரும்பும் பாதை

தாய்மைப் பொருளாதாரம்

இயற்கை வேளாண்மைக்கு முதலுதவிப் பெட்டி

எதிர்பார்த்து காத்திருக்கும் வரவுகள் :

 

படிக்க வேண்டும்

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்

அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி

ஏழாவது ஊழி, பொ.ஐங்கரநேசன், சாளரம்

இயற்கை: செய்திகள் சிந்தனைகள், ச. முகமது அலி, இயற்கை வரலாற்று அறக்கட்டளை

தமிழரும் தாவரமும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்

மௌன வசந்தம், ரேச்சல் கார்சன், எதிர் வெளியீடு

வேளாண் இறையாண்மை -பாமயன்

விலங்குகளும் விநோதக் குணங்களும்

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும் )

தமிழரும் தாவரமும்  -கு. வி. கிருஷ்ணமூர்த்தி  ( தேடுகிறேன் )

ஹோம் கார்டன் தோட்டக்கலை நிபுணர் பா.வின்செண்ட்

 இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை ( தேடுகிறேன் )

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள்  ( தேடுகிறேன் )

வீட்டுத் தோட்டம் வீட்டில் வளர்க்க வேண்டிய தோட்ட வகைகளும் பராமரிக்கும் முறைகளும்  ( தேடுகிறேன் )

விதை உற்பத்தி முறைகள் ( தேடுகிறேன் )

சிம்பிளா தோட்டம் போடு ( தேடுகிறேன் )

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள ( தேடுகிறேன் )

        மீன் வளர்ப்பு ( தேடுகிறேன் )

கழுதை வளர்ப்போம் கடனை அடைப்போம் ( தேடுகிறேன் )

நாட்டுப்புற வேளாண்மை ( தேடுகிறேன் )

கரன்சி கொட்டும் காட்டாமணக்கு ( தேடுகிறேன் )

துல்லிய பண்ணையத்தில் பயிர் பாதுகாப்பு அனுபவங்கள் ( தேடுகிறேன் )

மூலிகைப் பயிர்கள் சாகுபடி ( தேடுகிறேன் )

       இனிதே வாழ இயற்கை உணவுகள் ( தேடுகிறேன் )
       விதைப்போம் அறுப்போம்  ( தேடுகிறேன் )  – கங்காராணி பதிப்பகம்
        நீதியைத்தேடி
         நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள்.
         நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! பிணை (ஜாமீன்) எடுப்பது    எப்படி?

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சட்ட அறிவுக் களஞ்சியம்.

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்.

நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சாட்சியங்களை சேகரிப்பது எப்படி?

        தொடர்புக்கு  Mr. Natraj 09842909190, 09842399880