பசுமஞ்சள் வைத்தியம்

hscrp எனும் டெஸ்ட் உடலில் முக்கியமாக இதய ரத்தக் குழாய்களில் உள்ள உள்காயத்தை அறிய உதவுவதாகும்.
இது கார்ப் உணவுமுறை எடுக்கும் முக்கால்வாசி பேருக்கு மற்றும் ஸ்டிரெஸ் இருக்கும் பலருக்கும் அதிகமாக இருக்கிறது.
இது அதிகமாக இருந்தால் ஆபத்தாகும். இதை படிப்படியாக கீழ்கண்ட முறையில் குறைக்கலாம்.
பசு மஞ்சள் தோல் நீக்கியது ஒரு இன்ச் + துளசி இலை -3 + மிளகு தட்டியது -8 + சின்ன வெங்காயம் -1 இந்த நான்கையும் மாத்திரை போல் நீர் குடித்து விழுங்கவும் அல்லது கடித்தும் சாப்பிடலாம். இதை கொழுப்புனவு (முட்டை/கறி/பனீர்/வெண்ணை) சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும். பிறகு 4 பல் பூண்டை துண்டு துண்டாக நறுக்கி, பத்து நிமிடம் தட்டில் வையுங்கள். பத்து நிமிடம் கழித்து அதை மாத்திரை போல் விழுங்கவும். பத்து நிமிடம் வைத்து சாப்பிட்டால் தான் பூண்டின் நல்ல குணங்கள் வெளிப்படும். அப்படியே சாப்பிடக்கூடாது .
பசுமஞ்சள் வைத்தியம்
பூண்டு நாலு பல் என்றால் பூனை பல் சைஸ் இருக்கும். நாலு பெரிய வெங்காய சைஸ் அல்ல.
இதில் மிக முக்கியம் மஞ்சளே. பசு மஞ்சள் என்றால் பொங்கல் விழாவில் கிடைப்பது ஆகும். இஞ்சி போல இருக்கும். இதை கண்டிப்பாக வாங்க வேண்டும். மஞ்சள் தூள் போடக்கூடாது. எங்கு கிடைக்கும் என்பதை குழுவினரிடமோ அல்லது வேறு யாரிடமாவதோ விசாரியுங்கள். பொங்கல் விழா வந்தால் ஒரு வருடத்திற்கு தேவையானதை வாங்கி வையுங்கள். ஆர்கானிக் மஞ்சள், பூச்சி மருந்து மஞ்சள் என ரொம்ப யோசிக்காதீர்கள். கிடைப்பதை வாங்குங்கள். அதுவே முக்கியம்
மஞ்சள் இல்லாமல் hsCRP குறையாது.
எக்சர்சைஸ் செய்தால் hscrp அதிகமாகலாம். அப்போதும் மஞ்சளே சிறந்தது.
வெறும் வயிற்றில் இதையெல்லாம் போட்டு வயிற்றை புண்ணாக்க வேண்டாம்.
நாங்கள் மேலே சொன்ன அளவில் அனைத்தையும் போடுங்கள். அதிகமோ கம்மியோ நல்லதல்ல.

பசுமஞ்சள் பேஸ்ட் அகவும் உள்ளது. அமேசான் இணையதில் வாங்கினால் வீட்டிற்கே வந்து விடுகிறது

நன்றி :  எல்லா புகழும்  ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline