தொட்டாற்சிணுங்கி . . .

தொட்டாற்சிணுங்கி . . .- (mimosa pudica )

639px-Mimosa_pudica_003 siddha medicine-580

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல… உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

புண்கள் குறைய . . .

தொட்டாற்சுருங்கி இலையை உரலில் இடித்துச் சாறு எடுத்து, குழிபுண்ணில் இட்டு அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து துணியால் கட்டுப்போட்டு வர குழிப்புண் போன்ற புண்கள் குறையும். →

வயிற்று கடுப்பு குறைய . . .

தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்.

இடுப்புவலி குறைய . . .

தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி குறையும். →

சர்க்கரை நோய் குறைய . . .

தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும். →

உடல் குளிர்ச்சியாக . . .

தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும். →

சிறுநீர் எரிச்சல் குறைய . . .

தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து 10 கிராம் எடுத்து, காலையில் தயிருடன் கலந்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் குறையும். →

வாத வீக்கம் குறைய . . .

தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும் →

தேமல் குறைய . . .

தொட்டாற்சுருங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும். →

வயிற்றுக்கடுப்பு . . .

ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும். →

மூலச்சூடு குறைய . . .

தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.

மூல நோய் குறைய . . .

தொட்டாற் சுருங்கி இலை, நொச்சி இலை, எட்டி மர விதை, படிகாரம், வேப்பெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை களிம்பு பதத்தில் அரைத்து மூலம் உள்ள பகுதியில் பூசி வந்தால் மூல முளை குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline