தெரிந்துக் கொள்வோம் – பூண்டு

பூண்டு:

garlic15-571

பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

பூண்டில் வைட்டமின்கள் ‘ஏ’, பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

* புற்றுநோய் வராமல் தடுக்கும்.

* ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இத னால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.

* உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்!

* கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.

* எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

* கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை களின் எடை அதிகரிக்கும்.

* சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.

* வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.

* ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.

* கண்ணில் புரைவளர் வது தவிர்க்கப்படும்.

* சளியை போக்கும்.

* உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.

* முதுகுவலி குறையும்.

* காசநோய் வராமல் தடுக்கும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* உடலை இளமையாக வைத்துக்கொள்ளும்.

பூண்டின் மருத்துவ பலன்கள்:

இத்தகையை மகத்துவம் கொண்ட பூண்டுவை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லது. தினமும் காலை ஒரு மடக்கு தண்ணீர் அருந்திவிட்டு பூண்டு பல் 2-ஐ எடுத்து அரை குறையாக மென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சற்று வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை பூண்டு கஞ்சி வைத்து சாப்பிடலாம். பசும்பாலில் பூண்டு போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பசும்பாலில் பூண்டு காய்ச்சும்போது ஒரு தம்ளர் பாலுக்கு குறைந்தபட்சம் ஒரு பூண்டு போடப்பட வேண்டும்.

பச்சையாக தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவது, அவித்து 2 பூண்டு சாப்பிடுவதற்கு சமம். ஆனால் குடல் புண் உள்ளவர்கள் பச்சையாக பூண்டுவை சாப்பிடக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline