மதுவை தென்னம்பாளையில் இருந்துதான் இறக்குவார்கள்.மதுவின்குணம் வேறு.கள்ளின் குணம் வேறு.மரத்தில் இருந்து இறக்கிய மது நான்கு மணி நேரம் கழிந்தபின் கள்ளாகப் புளித்துப் போகிறது.மது என்றால் தேன் என்று பொருள்.தேனீக்கள் மலர்கள் தோறும் சென்று மதுவைக் கொண்டு வந்து சேகரிக்கின்றன.மரமேறும் தொழிலாளியும் பல மரங்கள் ஏறித்தான் மதுவை சேர்ப்பார்கள்.மருத்துவத்தில் தேன் எவ்வளவு இன்றிமையாத பொருளோ அதுபோல தென்னம் மதுவும் இன்றிமையாத துணை மருந்தாக விளங்குகிறது.ஒருவர் ஒரே தென்னை மரத்து மதுவை,புதிதாக நாற்பது நாளைக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவாரானால் நோய்கள் யாவும் தீர்ந்து உடல் பலப்பட்டுப்போகும்.
உடல் சூட்டைத் தணிக்கப் பசும்பால் சாப்பிடுவார்கள்.இது போல கடும் உழைப்பாளிகளின் சூட்டை எல்லாம் தென்னம் மது தணித்துவிடும்.சொறி சிரங்கு யாவும் நீங்கும்.இதனாலே தென்னம் மதுவுக்கு “ஆகாசப்பால்” என்ற பெயரும் உண்டானது.பசுவின் மடிக்காம்பில் இருந்து சுரப்பது பசும்பால்.தென்னம்பிள்ளையின் பாளையிலிருந்து சுரப்பது ஆகாசப்பால்.சூட்டைத் தணிப்பதில் இரண்டின் குணமும் ஒன்றே.கெட்ட பசும்பால் உடலுக்கு கெடுதல் தருவது போல் ஆகாசப்பால் “புளித்த கள்” ளாக மாறிவிட்டால் மயக்கமும் போதையும் உடலுக்கு பல பிணிகளையும் உண்டாக்கும்.
உடலில் சொறி நமைச்சல் உண்டானால் நோய்க்கு தற்கால நவீன மருத்துவர்கள் வைட்டமின் “சி” மாத்திரைகளை விழுங்கச்சொல்லுவார்கள்.ஒரு குவளை தென்னம் மதுவில் ஐம்பது வைட்டமின் “சி” மாத்திரைகள் உள்ளன என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.ஷயரோகம்,காசம்,எலும்புருக்கி,மூலரோகம்,இருமல்,இரைப்பு நோய் ஆகியவற்றிற்குப் பிரண்டை,உப்பு,நாயுருவி உப்பு,முதலான உயர்ந்த மருந்துகளை தென்னம் மது துணைக்கொண்டு ஒரு மண்டலம் இரண்டு மண்டலமாகக் கொடுத்து நோய்களைத் திறமையாகப் போக்கி விடுவது தமிழ் மருத்துவத்தின் பண்டைக்கால வழக்கத்தில் ஒன்று.
மதுவை அருந்துவோர் இங்கிதமாய் இன்மொழி பேசிடுவார்களாம்.சித்தர்கள் கூறியது புளித்துப்போன பழைய காடிக் கள்ளை அல்ல!புளித்த கள் அறிவை மயக்கி உடலைக் கெடுத்துவிடும்.புளிக்காத மது தேன் போல இனிக்கக்கூடியதே.இதை அருந்தினவர் பைங்கிளியே என்று மனைவி மக்களுடன் கொஞ்சுவார்களாம்.தற்காலத்தில் ரசாயன கலப்பு நிறைந்த மதுவை குடித்து விட்டு குடல் இரைப்பைகள் ரணமாகி இறப்பதோடு இல்லாமல் குடி போதை வெறியால் மனைவி மக்களையும் குத்தி கொலை செய்வது சாதாரணமாகிவிட்டது.
தென்ன மது இருந்த காலத்தில் எல்லோரும் குடித்து கொண்டு இருக்கவில்லை ஏனெனில் கடுமையாக நாளெல்லாம் உழைக்கும் தொழிலாளிகளும் விவசாயிகளும்தான் அலுப்பு தீர மது அருந்தினர் .தற்காலத்தில் சிறியோர்,பெரியோர்,மாணவர்கள் அனைவரும் குடித்து விட்டு கும்மாளம் போடுகின்றனர்.அரசே இதற்க்கு உதவி செய்வது நமது நாட்டின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் ஒரு இழுக்கான செயல்.எனவே உடலுக்கு நலம் விளைவிக்கும் தென்னம் மது மீண்டும் இறக்கபடவேண்டும்.
நன்றி.