தமிழகத்தில் சமீப காலமாக தரமற்ற விதைகளால் விவசாயிகள் அதிகமான மகசூல் பாதிப்பு அடைவதை பல இடங்களில் காண முடிகிறது.
பலவகையான விதைகள் தேர்ந்து எடுக்க பட்டு விற்பனைக்கு வருகின்றன .அதில் காய்கறி விதைகளில் 2,269 ரகங்களும், நெல் விதைகளில் 131 ரகங்களும், பயறு வகைகளில் 96 ரகங்களும், சிறுதானியங்களில் 115 ரகங்களும் பருத்தியில் 43 ரகங்களும் தேர்ந்து எடுக்க பட்டு பின்பு விருப்பனைக்கு தகுதியானவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரகங்கள், முளைப்புத்திறன், ஈரப்பதம், காலாவதி எண், சரியான விலை என அணைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனை கவினித்து வாங்க வேண்டும் .மேலும் சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளிலும் இந்த விசாரங்களா சரி பார்த்து வாங்க வேண்டும்
நாம் போயிட போகும் நிலம் இருக்கும் பருவநிலைக்கு ஏற்ற விதைகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.விதைகளின் குணாதியசங்கள் மாறுபட்டிருந்தால் விற்பனைக்கு தடை விதிக்க படுகிறது .
விதை உற்பத்தியாளர்கள் சான்று இல்லாத விதைகள் நாம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் .