தட்டாரப்பூச்சிகள்
தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை.
தாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது.
அந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறைவுடனும் இருக்கும்.
அது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது.
அந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன.
கால்நடைகளை மேய்ப்பவர்கள் இதை எளிதில் அறியலாம்.
கால் நடைகள் மேயும்போது தாவரங்கள் அசைவதால் அதன் இலைகளிலுள்ள பூச்சிகள் பறக்கின்றன.
அதைப்பிடித்துண்ண தட்டாரப்பூச்சிகள் கால்நடைகள் மேயும் இடங்களைச்சுற்றி ஏராளமாக பறக்கும்.
தட்டான் தாழப்பறந்தால் கிட்ட மழை என்பதை இதனுடன் பொருத்திப்பார்க்கலாம்.
நன்றி : Aran Kumar