ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி ?-(  ஒரு ஏக்கர் )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேவையான பொருட்கள்:

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ

நாட்டு பசுங்கோமியம் 10 லிட்டர்

வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர் ( அ ) பனம் பழம் -4

பயறு வகை மாவு   – 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து)

பயன் படுத்தும் நிலத்தின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட மண் கையளவு

தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை:
###############

தொட்டியில் நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுங்கோமியம் ,பயறு வகை மாவு,வெல்லம் இவற்றை முதலில் நன்கு கட்டி இல்லாதவாறு கரைத்து கொள்ள வேண்டும் .இதனுடன் 200 லிட்டர் தண்ணிரை சேர்த்து நிழலான இடத்தில தொட்டியின் வாய் பகுதியை  முடி வைக்க வேண்டும் .  தினமும் 2 முறை 3 நாட்களுக்கு  தவறாமல் கடிகார சுற்றில் ஒரு குச்சியின் முலம் நன்றாக  ஒரு நிமிடம் கலக்கி விடவேண்டும்.

ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன். இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

பயன்படுத்தும் முறை:
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த வகையான கட்டுப்பாடும் இல்லை.

2 Comments

  1. p.ilangovan 28/03/2016
  2. S.S.SHIVA SHANKHAR 18/11/2018

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline