நமது அனைத்து பிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தீர்வுகளுக்கு ஜாதகம் என்ற ஒன்று தீர்வாகுமா ?
பொதுவாகவே நாம் சோதிடம் பார்க்கவோ அல்லது பார்க்கவேண்டிய சூழ்நிலையில் தான் அங்கு செல்கிறோம்.நீங்கள் யோசித்து பாருங்கள் உங்களுக்கு இப்போது நிலைமை சரியில்லை என்று சொல்லாத சோதிடர் உண்டா ?.பிரச்சனைகள் ,கஷ்டங்கள் உள்ளவர்கள் தாம் பொதுவாக சோதிடரை சந்திக்க போவார்கள்.
சோதிடர்கள்
இன்றும் சிலர் சோதிடம் பார்க்க சென்றால் , சோதிடர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளை கூறி , உங்கள் கஷ்டம் நிச்சயம் தீரும். இன்னும் ஒரு மாதம் சிந்தியுங்கள், பின்பே தான் உங்களுக்கு நல்ல நேரம் வருகிறது. முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி தான் . இருந்தும் கொஞ்சம் கவனமாக செயல்படவும், கொஞ்சமாக நேரம் இடர்பாடுகள் கொடுக்கலாம்.ஆனால் உங்களுக்கு உச்சமான வெற்றி மட்டுமே கிடைக்கும் , முயலுங்கள் என்றும், அந்த கோயில் சென்று வாருங்கள் என்று பலன் சொல்லுவதும் உண்டு.
இதில் என்ன புரிகிறது. நமக்கு தன்னம்பிக்கையை ஊட்டி அனுப்பி விடுகிறார். நமது அனைத்து துக்கங்களும் மறைந்து மிகுந்த சந்தோசமும் , தன்னம்பிக்கையும் கொண்டு முயற்சியில் வெற்றி பெற்றும் விடுவது வழக்கம். இல்லையா ?
ஜோதிடம் பற்றிய அறிவியல் பார்வை
முதலில் பள்ளியில் நாம் படித்த உண்மையை நினைவில் கொள்ளவேண்டும்.
பூமிதான் சூரியனை சுற்றும் சூரியனை சுற்றுத்தான் எல்லா கிரங்களும் நகரும்.
ஆனால் சோதிடத்தில் பூமியை சுற்றித்தான் எல்லாம் நிகழ்கிறது.இது முழக்க முழுக்க தவறு. மேலும் ராகு, கேது என்கிற கிரங்கள் இல்லை.
அறிவியல் ரீதியாக சோதிடம் தவறு என்பதை நூறு முறையல்ல ஆயிரம் முறை நிரூபிக்கலாம். பிரச்சனையின் உண்மையான காரணத்தை தேடவும் அதிலிருந்து மீளும் வழி தேடுங்கள்.